“விவசாயிகள் வாங்கிய நகைக் கடன் தள்ளுபடி” : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

 

“விவசாயிகள் வாங்கிய நகைக் கடன் தள்ளுபடி” : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“விவசாயிகள் வாங்கிய நகைக் கடன் தள்ளுபடி” : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை நெருங்கி வரும் நிலையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வண்ணம் 12, 110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக சுமார் 5000 கோடி இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

“விவசாயிகள் வாங்கிய நகைக் கடன் தள்ளுபடி” : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

இந்நிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 110விதியின் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். விவசாயிகளின் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 6 சவரன் நகை கடன் தள்ளுபடி என அவர் அறிவித்துள்ளார். அதேபோல் மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் மூலம் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்த நிலையில் விவசாயிகளின் நகை கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.