நாடு முழுவதும் பல எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கியது ஜேஇஇ மெயின் தேர்வு!

 

நாடு முழுவதும் பல எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கியது ஜேஇஇ மெயின் தேர்வு!

ஜேஇஇ தேர்வை ஒத்திவைக்க கோரி பல எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில். இன்று ஜேஇஇ தேர்வு தொடங்கியுள்ளது.

ஐஐடி, என்ஐடி, மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் பொறியியல் படிப்புகளுக்காக சேருவதற்கு ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதே போல மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலால் பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், இந்த தேர்வையும் மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நாடு முழுவதும் பல எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கியது ஜேஇஇ மெயின் தேர்வு!

ஆனால் எந்த காரணத்தை கொண்டும் தேர்வுகள் ரத்து செய்யப்படாது என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், தேர்வுகளை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அதனால் அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு 7 மாநில அமைச்சர்கள், சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் பல எதிர்ப்புகளுக்கிடையே பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. வரும் 6 ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த தேர்வை நாடு முழுவதும் 8.58 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மேலும், வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை 15.97 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.