#BREAKING நாடு முழுவதும் JEE தேர்வு ஒத்திவைப்பு!

 

#BREAKING நாடு முழுவதும் JEE தேர்வு ஒத்திவைப்பு!

இந்தியா மீண்டும் கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. இரண்டாவது அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, புதிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

#BREAKING நாடு முழுவதும் JEE தேர்வு ஒத்திவைப்பு!

அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. திருமணம், இறுதிச் சடங்கு, திருவிழா என பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கூடவே நுழைவுத் தேர்வு, பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு என அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

#BREAKING நாடு முழுவதும் JEE தேர்வு ஒத்திவைப்பு!

குறிப்பாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதுகலை படிப்பிற்கான நீட் தேர்வும் சமீபத்தில் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஏப்ரல் மாதத்திற்கான JEE நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. அதன்படி ஏப்ரல் 27,28,30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.