நெட்பிளிக்ஸில் வெளியாகியிறது ஜகமே தந்திரம்… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

நெட்பிளிக்ஸில் வெளியாகியிறது ஜகமே தந்திரம்… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும்  பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரித்துள்ளது.

நெட்பிளிக்ஸில் வெளியாகியிறது ஜகமே தந்திரம்… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு உழைப்பாளர்கள் தினமான மே 1-ம் தேதியே ரிலீசாக வேண்டிய இப்படம் ஊரடங்கால் தள்ளிப்போனது. கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஜூன் 18-ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் இணையதளம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.