“ஜெயலலிதா சிறை செல்ல, அதிமுக வழக்கறிஞர்களும் ஒரு காரணம்” – புகழேந்தி பேட்டி

 

“ஜெயலலிதா சிறை செல்ல, அதிமுக வழக்கறிஞர்களும் ஒரு காரணம்” – புகழேந்தி பேட்டி

கோவை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்ல, அதிமுக வழக்கறிஞர்களும் ஒரு காரணம் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த 1996ஆம் ஆண்டு திமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது 2 வழக்குகள் தொடரப்பட்டு, பல கோடி ரூபாய் அரசு பணம் வீணடிக்கபட்டு, பின்னர் வழக்கு வாபஸ் பெறபட்டதாக தெரிவித்தார். ஆ.ராசா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தரம் தாழ்ந்து பேசுவதாகவும், ஆனால் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் கலைஞர் குறித்து தவறாக பேசியது இல்லை என்றும் அவர் கூறினார்.

“ஜெயலலிதா சிறை செல்ல, அதிமுக வழக்கறிஞர்களும் ஒரு காரணம்” – புகழேந்தி பேட்டி

2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்து உள்ள நிலையில், வழக்கறிஞர் என்ற முறையில் ஆ.ராசா நேர்மையாக போய் வாதாடாமல், சந்து பொந்துகளை தேடுவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முக்கிய குற்றவாளி டி.டி.வி தினகரன் என்று கூறிய புகழேந்தி, அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட என்ன காரணம் எனவும், தினகரனுக்கும் திமுகவிற்கும் என்ன உறவு என்றும் கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறாக பேசினால் எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று கூறிய புகழேந்தி, பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா சிறை செல்ல, அதிமுக வழக்கறிஞர்களும் ஒரு காரணம் என தெரிவித்தார்.