ஜெயலலிதா நினைவிடம் திறக்க பிரதமர் மோடி, அமித் ஷா வராதது உறுதியா?

 

ஜெயலலிதா நினைவிடம் திறக்க பிரதமர் மோடி, அமித் ஷா வராதது உறுதியா?

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதன் திறப்பு விழாவுக்கு ஏற்பாடுகளும் மிகப் பிரமாண்டமாக செய்யப்பட்டன.

ஜெயலலிதா நினைவிடம் இந்த மாதம் 27ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே சிலர் தெரிவித்தனர். இன்று தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிட்டுள்ள குறிப்பில் இம்மாதம் 27 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்க இருப்பதாகவும், அதை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா நினைவிடம் திறக்க பிரதமர் மோடி, அமித் ஷா வராதது உறுதியா?

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றது ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் அழைப்பதற்காகத்தான் என்றும் ஏற்கனவே பலரால் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று உள் துறை அமைச்சர் அமித் ஷாவையும், இன்று பிரதமர் நரேந்திர மோடியையும் தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்துள்ளார்.

அந்த சந்திப்புகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் செய்தி குறிப்பு வெளிவந்துள்ளது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பதற்கு வரவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

ஜெயலலிதா நினைவிடம் திறக்க பிரதமர் மோடி, அமித் ஷா வராதது உறுதியா?

பாஜக தரப்பில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வில்லை என்ற அறிவிப்பு கடும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதனால்தான் துக்ளக் விழாவில் கூட முதலில் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது மாற்றப்பட்டு நடந்ததாகக் கூறப்பட்டது. எனவே பாஜகவின் முக்கிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் ஏதேனும் அரசியல் சார்ந்த பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இனி அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

கூட்டணி விவகாரங்களை, தொகுதி உடன்பாடுகளை நேரில் வந்து பேசும் அளவிற்கு பெரியதாக பாஜக தலைவர்கள் நினைக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு விழாவிற்கு வருவதை தவிர்த்து விட்டதாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், இரு தரப்பிலும் அப்படியான அதிகாரபூர்வமான செய்திகள் வெளியாக வில்லை.

ஜெயலலிதா நினைவிடம் திறக்க பிரதமர் மோடி, அமித் ஷா வராதது உறுதியா?

ஜெயலலிதா மீது பிரதமர் நரேந்திரமோடிக்கு நல்ல மதிப்பு இருந்த போதும், ஜெயலலிதாவிற்கான முக்கிய விழாவில் அவர் கலந்து கொள்ளாதது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.