ஜெயலலிதா வீட்டின் சாவியை கேட்டு ஜெ. தீபக் புதிய வழக்கு!

 

ஜெயலலிதா வீட்டின் சாவியை  கேட்டு ஜெ. தீபக் புதிய வழக்கு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், தங்களை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்று தீபக் மற்றும் தீபா மனு அளித்திருந்தனர்.

ஜெயலலிதா வீட்டின் சாவியை  கேட்டு ஜெ. தீபக் புதிய வழக்கு!

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை நேரடி வாரிசுகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வீட்டின் சாவியை  கேட்டு ஜெ. தீபக் புதிய வழக்கு!

இந்நிலையில் ஜெயலலிதா வீட்டு சாவியை தன்னிடம் தருமாறு தீபக் தொடர்ந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதி மன்றம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் சாவியை ஒப்படைக்கக் கோரி தீபக் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவரின் கோரிக்கையை ஏற்று வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேறு அமர்வுக்கு மாற்றினார். தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசாக அறிவித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.இரு வேறு தீர்ப்புகள் வருவதை தவிர்க்க வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கமளித்துள்ளது.