அயோத்தியில் மசூதியும் இருக்க வேண்டும் என்று விரும்பிய ஜெ.,!

 

அயோத்தியில் மசூதியும் இருக்க வேண்டும் என்று விரும்பிய ஜெ.,!

யோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும். அதே சமயம் மசூதியும் அயோத்தியில் இருக்க வேண்டும் என்று மறைந்த ஜெயலலிதா விரும்பியதாக
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அயோத்தில் நாளை ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி இந்த பூமி பூஜையை தொடங்கிவைக்கிறார்.
இந்த விழாவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் மசூதியும் இருக்க வேண்டும் என்று விரும்பிய ஜெ.,!

இதுகுறித்த அவரது அறிக்கையில், ’’அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நடைபெற உள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனதுசார்பாகவும்,
தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அந்த அறிக்கையில், ‘’1992ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட
அம்மா(ஜெயலலிதா), ’அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி பேசினார். அதே சமயம் மசூதியும் அயோத்தியில் இருக்க
வேண்டும் என்று விரும்பினார். இதன் மூலம், தேசிய ஒற்றுமைக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை
அவர் விரும்பினார் என்பது தெளிவாகிறது.

அயோத்தியில் மசூதியும் இருக்க வேண்டும் என்று விரும்பிய ஜெ.,!

உச்சநீதிமன்றம் வழங்கிய அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கத்தக்க ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான
சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு எனது
மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில் ராமர் கோவில்பூஜை விழாவில் கலந்துகொண்டு
அடிக்கல் நாட்டவுள்ள பாரத பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.’’என்றும் கூறியிருக்கிறார்.