ஜெ.நினைவிடம் திறப்பு : தனி ரயிலில் தொண்டர்களை அழைத்து வந்த அமைச்சர்!

 

ஜெ.நினைவிடம் திறப்பு :  தனி ரயிலில் தொண்டர்களை அழைத்து வந்த அமைச்சர்!

மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்படவுள்ளது. 50,422 சதுர அடியில் ரூ.80 கோடியில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு திறக்கிறார். விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஜெ.நினைவிடம் திறப்பு :  தனி ரயிலில் தொண்டர்களை அழைத்து வந்த அமைச்சர்!

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதற்கான பணி நடைபெற்று வந்தது. ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பில் “மக்களால் நான் மக்களுக்காக நான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொண்டர்கள் மெரினாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஜெ.நினைவிடம் திறப்பு :  தனி ரயிலில் தொண்டர்களை அழைத்து வந்த அமைச்சர்!

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு தனி ரயில் மூலம் மதுரையிலிருந்து தொண்டர்களை அழைத்து வந்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. சுமார் 1500 தொண்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் அமைச்சர் செல்லூர் ராஜூவும் ரயிலில் பயணித்த படி சென்னை வந்துள்ளார். ரயிலானது மாலை 5.30 மணிக்கு மதுரைக்கு செல்லவும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில், ஜெயலலிதா நினைவிட திறப்புக்கு தொண்டர்களை அழைத்து வருவது குறித்து செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதனடிப்படையிலேயே அவர் தொண்டர்களை சென்னை அழைத்து வந்துள்ளார்.