சசிகலா பூரண சுகம் அடைய வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்- அமைச்சர் ஜெயக்குமார்

 

சசிகலா பூரண சுகம் அடைய வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்- அமைச்சர் ஜெயக்குமார்

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “4 மீனவர்கள் பிரச்சனை மிகவும் துரதிருஷ்டமானது. கண்டனத்துக்குரியது, ஒருபோதும் தமிழக மீனவர்கள் வேண்டும் என்றே எல்லை தாண்டுவது கிடையாது. மீன்களின் ஓட்டத்திற்கு ஏற்பவும் காற்றின் வேகத்தின் காரணமாகவும் திசைமாறும் அதன் காரணமாகவும் தான் தற்செயலாக மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் ஒருவேளை எல்லை தாண்டும் பட்சத்தில் இலங்கை அரசு உடனடியாக இந்திய கடலோர படையினர் மற்றும் இந்திய அரசிடமும் தெரிவிக்க வேண்டும் அதைவிட்டுவிட்டு அவர்களை சிறையில் அடைப்பது படகுகளை பறிமுதல் செய்வது மீனவர்களை துன்புறுத்துவது என்பது ஒருபோதும் ஏற்க முடியாத ஒரு விஷயம்.

மீனவர்களுடைய பிரச்னை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் பாரதப் பிரதமர் இடம் கடிதம் எழுதியுள்ளார். பிரதமரும் இதுகுறித்து இலங்கை நாட்டிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளார். தற்போதைய கூட்டணி சுமுகமாக தொடர்ந்து வருகிறது. அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதிமுகவில் இணைவதற்கும் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. திமுகவில் உள்ள பல கூட்டணி கட்சிகள் கூட அதிமுகவிற்கு வர வாய்ப்புகள் உள்ளது. ஜெயிக்க கூடிய கூட்டணி என்றால் அதிமுகதான். அதன் காரணமாகவே ஜெயிக்கும் கட்சிக்கு தான் கூட்டணி அமைக்க வருவார்கள்.

சசிகலா பூரண சுகம் அடைய வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்- அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா பூரண சுகம் அடைய வேண்டும் என்பது மனிதாபிமானம் உள்ள எவரும் நினைக்கக்கூடிய விஷயம். அந்த வகையில் சசிகலா சீராக நலம் பெற வேண்டும் என்பதே நாங்கள் நினைக்கிறோம். தன் மாநிலத்தில் பொதுவாக சிகிச்சை முறை குறித்து தன் மாநில அரசு கருத்து தெரிவிக்கலாம். அதனால் அது வேறு ஒரு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது அதை அந்த அரசு தான் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் சிங்கிள் மெஜாரிட்டி நாங்கள் அதிக அளவில் பெறுவோம் என்பதனால் அதற்கேற்ற வகையில் பெரும்பான்மையான இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே போட்டியிடும்”என்றார்