இந்தியாவுக்கு ஜப்பான் 3,500 கோடி ரூபாய் தருகிறது… எதற்கு தெரியுமா?

 

இந்தியாவுக்கு ஜப்பான் 3,500 கோடி ரூபாய் தருகிறது… எதற்கு தெரியுமா?

கொரோனாவின் பாதிப்பு 2020 மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் தெரியத் தொடங்கியது. வேகமாகப் பரவத் தொடங்கியதால், அம்மாத இறுதியிலிருந்து லாக்டெளன் அறிவிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல், லாக்டெளன், சிகிச்சை என பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்தும் நோய்த் தொற்றும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு ஜப்பான் 3,500 கோடி ரூபாய் தருகிறது… எதற்கு தெரியுமா?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிம் கேர்ஸ் உருவாக்கப்பட்டு பலரிடமிருந்து நிதி பெறப்படுகிறது. அதேபோல மாநிலங்கள் அளவில் முதலமைச்சர் நிவாரண நிதியில் தொகை பெறப்படுகிறது.

இந்த இரு நிதி சேகரிப்புக்கு பொதுமக்கள், திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர் உள்ளிட்ட பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

பிஎம் கேர்ஸ் நிதி பற்றிய வெளிப்படைத் தன்மை இல்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடு ஒன்றோடு கொரோனா தடுப்பு பணியாக சுகாதார மேம்பாட்டுக்கு திட்டக்கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவுக்கு ஜப்பான் 3,500 கோடி ரூபாய் தருகிறது… எதற்கு தெரியுமா?

ஜப்பானிய அரசு கோவிட்-19 நெருக்கடி அவசரகால மறுமொழி ஆதரவுக்காக ஜப்பானின் JPY50 பில்லியனை (தோராயமாக ரூ. 3,500 கோடி) அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவிக் கடனாக வழங்கியுள்ளது. 

இந்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர்.சி.எஸ்.மோகபத்ரா, மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு.சுசுகி சடோஷி இடையே கோவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதாரத்துறை திட்டக்கடனுக்கான குறிப்புகள் இன்று பரிமாறப்பட்டன. பிறகு இருநாட்டு தரப்பினர் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவுக்கு ஜப்பான் 3,500 கோடி ரூபாய் தருகிறது… எதற்கு தெரியுமா?

கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முயற்சிகளை ஆதரிப்பதும், எதிர்காலத் தொற்றுநோய்களை நிர்வகிக்க சுகாதார அமைப்பைத் தயாரிப்பதும், தொற்றுநோய்களுக்கு எதிராக இந்தியாவின் சுகாதார அமைப்புகளின் பின்னடைவை சரிப்படுத்துவதும் இந்தத் திட்டக்கடன் நோக்கமாகும்.