காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி…. அதிக வாக்குகளை பெற்ற பா.ஜ.க..

 

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி…. அதிக வாக்குகளை பெற்ற பா.ஜ.க..

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. அதேசமயம் இரண்டாவது இடத்தை பிடித்தபோதிலும், அதிக வாக்குகளை பெற்ற கட்சியாக பா.ஜ.க. உள்ளது.

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அண்மையில் 280 மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தொகுதிகளுக்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப அளிக்க வேண்டும் வலியுறுத்தும் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்பட 7 மாநில கட்சிகள் இணைந்து மக்கள் கூட்டணி என்று ஒரு அணியாக போட்டியிட்டன. அதேசமயம் அந்த கட்சிகளின் பரம எதிரியான பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. பாரம்பரிய கட்சியான காங்கிரசும் தனித்து போட்டியிட்டது.

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி…. அதிக வாக்குகளை பெற்ற பா.ஜ.க..
மக்கள் கூட்டணி தலைவர்கள்

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இன்று அதிகாலை 12 மணி நிலவரப்படி, இந்த தேர்தலில் அதிகபட்சமாக மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. 70 இடங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஜம்மு அண்டு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 26 வெற்றிகளுடன் 3வது இடத்தை பிடித்தது. அதேசமயம் பாரம்பரிய கட்சியான காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 4வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்த தேர்தலில் 21 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி…. அதிக வாக்குகளை பெற்ற பா.ஜ.க..
காங்கிரஸ்

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் அதிக இடங்களை மக்கள் கூட்டணி வென்றபோதிலும், பா.ஜ.க.தான் இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற அரசியல் கட்சியாக உள்ளது. 70 இடங்களில் வெற்றி பா.ஜ.க. மொத்தம் 4.42 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. அடுத்து 56 இடங்களை கைப்பற்றிய தேசிய மாநாட்டு கட்சி மொத்தம் 2.11 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. 21 இடங்களை வென்ற காங்கிரஸ் 1 லட்சத்துக்கும் சற்று குறைவாக வாக்குகளை பெற்றுள்ளது.