“தர்மபுரியில் வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும்” – கே.பி.அன்பழகன் உறுதி

“தர்மபுரியில் வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும்” – கே.பி.அன்பழகன் உறுதி

தர்மபுரி மாவட்டத்தில் வரும் பொங்கல் பண்டிகை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

“தர்மபுரியில் வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும்” – கே.பி.அன்பழகன் உறுதி
“தர்மபுரியில் வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும்” – கே.பி.அன்பழகன் உறுதி

தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பேரவையை தொடங்கிவைத்த அவர், பின்னர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழைத்துவரப்பட்ட நாட்டின ஜல்லிக்கட்டு காளைகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், தடைகள் பலவற்றை கடந்து தமிழகத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசே காரணம் என்றும் தெரிவித்தார். மேலும், பாரம்பரிய மிக்க ஆலம்பாடி மாட்டினத்தை காக்கவும், இன விருத்தியை அதிகரிக்கவும் பாலகோடு அருகே ஆராய்ச்சி மையத்தை தமிழக அரசு அமைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

“தர்மபுரியில் வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும்” – கே.பி.அன்பழகன் உறுதி