ஆயுதம் இருந்தது… ஒப்பந்தத்தை மதித்து பயன்படுத்தவில்லை! – ராகுலுக்கு ஜெய்சங்கர் பதில்

 

ஆயுதம் இருந்தது… ஒப்பந்தத்தை மதித்து பயன்படுத்தவில்லை! – ராகுலுக்கு ஜெய்சங்கர் பதில்

சீன தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் ஆயுதமின்றி இருந்ததாக ராகுல் காந்தி கூறியதற்கு மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

ஆயுதம் இருந்தது… ஒப்பந்தத்தை மதித்து பயன்படுத்தவில்லை! – ராகுலுக்கு ஜெய்சங்கர் பதில்ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பேட்டியைக் குறிப்பிட்டு எல்லையில் ஆயுதமின்றி ராணுவ வீரர்களை அனுப்பியது யார், இவர்கள் மரணத்துக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

http://


இதற்கு மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். அதில், “எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து படையினரும் எப்போதும் ஆயுதம் வைத்திருப்பார்கள். ஜூன் 15ம் தேதி கல்வானிலும் வீரர்கள் ஆயுதங்களை வைத்திருந்தனர்.1996 மற்றும் 2005 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தத்தின் படி துப்பாக்கிகளை பயன்படுத்த கூடாது என்பதால் இந்திய வீரர்கள் அதனை பயன்படுத்தவில்லை ” என்று கூறியுள்ளார்.
இவ்வளவு சொன்ன அமைச்சர் ஜெயக்குமார் ராணுவ வீரர்கள் பிறகு எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தையும் விளக்கியிருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.