ஜாப்னா அணி முதலிடத்தில்… மற்றவை? – LPL பாயிண்ட் டேபிள் நிலவரம்!

 

ஜாப்னா அணி முதலிடத்தில்… மற்றவை? – LPL பாயிண்ட் டேபிள் நிலவரம்!

இலங்கையில் எல்.பி.எல் போட்டிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. இலங்கையில் எல்.பி.எல் போட்டிகள் கடந்த எட்டாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில், கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்லை ஹோர்கஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இந்நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் எல்.பி.எல் பாயிண்ட் டேபிள் நிலவரம் என்னவென்று பார்த்துவிடலாம்.

ஜாப்னா அணி முதலிடத்தில்… மற்றவை? – LPL பாயிண்ட் டேபிள் நிலவரம்!

ஜாப்னா அணி ஐந்து போட்டிகளில் ஆடி, நான்கில் வென்று 8 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது. கொழும்பு அணி நான்கு போட்டிகளில் விளையாடி, மூன்றில் வென்று ஒன்றில் தோற்று 6 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

தம்புள்லை ஹோர்கஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி, மூன்றில் வென்று ஒன்றில் தோற்று 6 புள்ளிகளோடு இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது.

ஜாப்னா அணி முதலிடத்தில்… மற்றவை? – LPL பாயிண்ட் டேபிள் நிலவரம்!

கண்டி அணி ஐந்து போட்டிகளில் ஆடி, ஒன்றில் மட்டுமே வென்றதால் 2 புள்ளிகளோடு நான்காம் இடத்தில் உள்ளது. காலி கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோற்றதால் புள்ளிகள் ஏதும் பெறாமல் கடைசி இடமான ஐந்தாம் இடத்தில் உள்ளது.