மேற்கு வங்கத்தில் லட்சிய தங்க பெங்கால் பிரச்சாரத்தை தொடங்கிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

 

மேற்கு வங்கத்தில் லட்சிய தங்க பெங்கால் பிரச்சாரத்தை தொடங்கிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் தோ்தல் அறிக்கைக்காக மக்களிடம் பரிந்துரைகள் பெறும் லட்சிய தங்க பெங்கால் பிரச்சாரத்தை அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதுவரை மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யாத பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக மாதந்தோறும் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அந்த மாநிலத்துக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் லட்சிய தங்க பெங்கால் பிரச்சாரத்தை தொடங்கிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா
பா.ஜ.க.

கொல்கத்தாவில் நேற்று ஜே.பி. நட்டா பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களின் பரிந்துரைகளை கேட்கும் லட்சிய தங்க பெங்கால் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கூறியதாவது: கட்சியின் தேர்தல் அறிக்கை மாதுவா சமூகம், பெண்கள் மற்றும் இளைஞர்களின் சமூக-பொருளாதார வலுயுறுத்தும். மாநிலத்தின் கட் மணி மற்றம் சிண்டிகேட் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். லட்சிய தங்க பெங்கால் பிரச்சாரம் மார்ச் 3ம் தேதி தொடங்கி அம்மாதம் 30ம் தேதி வரை நடக்கும். 294 தொகுதிகளிலும் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்பது எங்கள் இலக்கு. 30 ஆயிரம் பரிந்துரை பெட்டிகள் இருக்கும்.

மேற்கு வங்கத்தில் லட்சிய தங்க பெங்கால் பிரச்சாரத்தை தொடங்கிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா
ஜே.பி. நட்டா

தங்க பெங்கால கட்டியெழுப்புவதற்கான எங்கள் முயற்சியில் பொது மக்களின் ஆலோசனையை பெற விரும்புகிறோம். பெண்கள் அச்சமின்ற வாழக்கூடிய மேற்கு வங்கத்தை கட்டியெழுப்புவதை பா.ஜ.க. நோக்கமாக கொண்டுள்ளது. மாதுவா சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி மற்றும் வேலைகளை பெற்று நல்ல வாழ்க்கை வாழ வேண்டும். நாங்கள் மேற்கு வங்த்தில் நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். நிலக்கரி கடத்தல் மற்றும் சிண்டிகேட் மற்றும் பண கலாச்சாரத்தை குறைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.