பப்ஜி விளையாடியதை தாயார் கண்டித்ததால், ஐ.டி.ஐ மாணவர் தற்கொலை

பப்ஜி விளையாடியதை தாயார் கண்டித்ததால், ஐ.டி.ஐ மாணவர் தற்கொலை

ஆவடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடிதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த ஐ.டி.ஐ மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு சிவசக்திநகரை சேர்ந்த அருள் அந்தோணி (47) – பவுலின் ஜக் (41) தம்பதியரின் மகன் டேனியல் ஜோசப் (17). இவர் அம்பத்தூரில் உள்ள ஐ.டி.ஐ ஒன்றில் படித்து வருகிறார்.

பப்ஜி விளையாடியதை தாயார் கண்டித்ததால், ஐ.டி.ஐ மாணவர் தற்கொலை

இந்நிலையில் ஜோசப் அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி செயலியை தனது போனில் பதிவிறக்கம் செய்து, நேற்று இரவு வீட்டில் வெகுநேரம் விளையாடியதாக கூறப்படுகிறது.

பப்ஜி விளையாடியதை தாயார் கண்டித்ததால், ஐ.டி.ஐ மாணவர் தற்கொலை

இதனால், அவரது தாயார் பவுலின் ஜக் மகனை கண்டித்து, மொபைல் போனை பறித்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த டேனியல் ஜோசப் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பப்ஜி விளையாடியதை தாயார் கண்டித்ததால், ஐ.டி.ஐ மாணவர் தற்கொலை

கடையில் இருந்து வீடு திரும்பிய அவரது தாயார் மகன் தற்கொலை செய்ததை அறிந்து கதறிஅழுதார். இதுகுறித்து அருள்அந்தோணி அளித்த புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.