சிகரெட் வியாபாரம் சுமார்… ஐ.டி.சி. லாபம் ரூ.2,343 கோடியாக குறைந்தது…

 

சிகரெட் வியாபாரம் சுமார்… ஐ.டி.சி. லாபம் ரூ.2,343 கோடியாக குறைந்தது…

சிகரெட் முதல் பிஸ்கட், கோதுமை மாவு, நோட்புக் வரை பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.2,342.76 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 26 சதவீதம் குறைவாகும். 2020 ஜூன் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் நிகர லாபமாக ரூ.3,173.94 கோடி ஈட்டியிருந்தது.

சிகரெட் வியாபாரம் சுமார்… ஐ.டி.சி. லாபம் ரூ.2,343 கோடியாக குறைந்தது…

2020 ஜூன் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.9,501.75 கோடியாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் காட்டிலும் 17.4 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் செயல்வாட்டு வாயிலான வருவாயாக ரூ.11,502.82 கோடி ஈட்டியிருந்தது.

சிகரெட் வியாபாரம் சுமார்… ஐ.டி.சி. லாபம் ரூ.2,343 கோடியாக குறைந்தது…

கடந்த 2020 ஜூன் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் சிகரெட் வர்த்தக வருவாய் 29 சதவீதம் குறைந்து ரூ.3,853.79 கோடியாக சரிவடைந்துள்ளது. மேலும் நுகர்வோர் பொருட்கள் வர்த்தக பிரிவு மொத்த வருவாய் ரூ.7,228.36 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் சிகரெட் வர்த்தகம் வாயிலாக ரூ.5,433.40 கோடியும், நுகர்வோர் பொருட்கள் வாயிலாக ரூ.8,493.45 கோடியும் வருவாய் ஈட்டியிருந்தது.