சிகரெட், ஹோட்டல் வர்த்தகம் சுமார்…. ஐ.டி.சி. லாபம் ரூ.3,232.4 கோடியாக குறைந்தது…

சிகரெட், ஹோட்டல் வர்த்தகம் சுமார்…. ஐ.டி.சி. லாபம் ரூ.3,232.4 கோடியாக குறைந்தது…

ஐ.டி.சி. நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,232.4 கோடி ஈட்டியுள்ளது.

சிகரெட் முதல் பிஸ்கட், கோதுமை மாவு, நோட்புக் வரை பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,232.4 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் 19.7 சதவீதம் குறைவாகும்.

சிகரெட், ஹோட்டல் வர்த்தகம் சுமார்…. ஐ.டி.சி. லாபம் ரூ.3,232.4 கோடியாக குறைந்தது…
சிகரெட்

சிகரெட் மற்றும் ஹோட்டல் பிரிவு வர்த்தகத்தில் சிறிது தொய்வு ஏற்படதன் காரணமாக நிகர லாபம் குறைந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் நிகர லாபமாக ரூ.4,023.10 கோடி ஈட்டியிருந்தது. 2020 செப்டம்பர் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 0.9 சதவீதம் அதிகரித்து ரூ.11,976.8 கோடியாக உயர்ந்துள்ளது.

சிகரெட், ஹோட்டல் வர்த்தகம் சுமார்…. ஐ.டி.சி. லாபம் ரூ.3,232.4 கோடியாக குறைந்தது…
ஐ.டி.சி.

சிகரெட் பிரிவு வாயிலான வருவாய் 3.9 சதவீதம் குறைந்து ரூ.5,121.30 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் எப்.எம்.சி.ஜி. பிரிவு வாயிலான வருவாய் 15.4 சதவீதம் அதிகரித்து ரூ.3,795 கோடியாக உயர்ந்துள்ளது. ஹோட்டல் பிரிவு வாயிலான வருவாய் 80.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.81.96 கோடியாக சரிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஐ.டி.சி. பங்கின் விலை 0.49 சதவீதம் குறைந்து ரூ.173.95ஆக இருந்தது.