“சசிகலா வருகைக்கு பிறகும் என் ஆட்சி தான்” – எடப்பாடி பழனிசாமி உறுதி!

 

“சசிகலா வருகைக்கு பிறகும் என் ஆட்சி தான்” –  எடப்பாடி பழனிசாமி உறுதி!

சசிகலா வருகைக்கு பிறகும் என் ஆட்சி தான் என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

“சசிகலா வருகைக்கு பிறகும் என் ஆட்சி தான்” –  எடப்பாடி பழனிசாமி உறுதி!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இடது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறி வருகிறார். நான் மக்களால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவன். என்னை முதல்வராக அதிமுக எம்எல்ஏக்கள் தான் தேர்வு செய்தார்கள் என்றார்.

“சசிகலா வருகைக்கு பிறகும் என் ஆட்சி தான்” –  எடப்பாடி பழனிசாமி உறுதி!

இந்நிலையில் காஞ்சிபுரம் தேர்தல் பரப்புரையில் பேசி வரும் முதல்வர் பழனிசாமி, ஜனவரி 27-ஆம் தேதிக்கு பின்பும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும். ஜனவரி 27 சசிகலா விடுதலை ஆனதும் அதிமுக ஆட்சி நடக்காது என ஸ்டாலின் கூறியதற்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் மு க ஸ்டாலின் உட்பட அனைவரின் வீட்டிற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாகிறார். அன்றே நாளே மெரினாவில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படவுள்ளது. சசிகலா வருகைக்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறிவரும் நிலையில் வரும் 27 ஆம் தேதியை எதிர்நோக்கி தமிழக அரசியல் களமே காத்துக்கிடக்கிறது.