நீட் தேர்வு விவகாரம் – அரசியல் கட்சிகளின் அறிக்கை போர்

 

நீட் தேர்வு விவகாரம் – அரசியல் கட்சிகளின் அறிக்கை போர்

நீட் தேர்வு விவகாரம், தமிழகத்தில் மீண்டும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சம், குழப்பம், மன அழுத்தம் காரணமாக அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், நீட் தேர்வு குறித்த விவாதம் மீண்டும் மேலெழுந்துள்ளது.

நீட் தேர்வு விவகாரம் – அரசியல் கட்சிகளின் அறிக்கை போர்


நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் வரை அனுப்பப்பட்டது. ஆனால் தீர்மானம் சட்டமாகாத நிலையில், 2017 ஆம் ஆண்டில் இருந்து நீட் தேர்வு அமலானது.


இந்த நிலையில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாணவர்கள் மரணம் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்றும், எங்கள் ஆட்சியில் நீட் தேர்வை ஒழிப்போம் என்றும் மாறி மாறி அறிக்கை போர் நடத்துகின்றன அரசியல் கட்சிகள்.

நீட் தேர்வு விவகாரம் – அரசியல் கட்சிகளின் அறிக்கை போர்

மாணவர்களுக்கு மன அழுத்த பயிற்சி வேண்டும்

நீட் தேர்வை எதிர்கொள்வதில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலும் மாணவர்கள் அமைதியான போக்கை கடைபிடிக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்துகிறது.
தமிழக மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த சிக்கல் இருக்கிறது என ஒரு சாரர் குற்றம் சாட்டுகின்றனர். மாணவர்களுக்கு மன அழுத்த பயிற்சியை அளிக்க வேண்டும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது.

அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகள்

இன்னொரு பக்கம், அரசியல் கட்சிகளோ நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதற்கு மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கின்றன.
அதிமுக ஆட்சியில் தான் நீட் கொண்டு வரப்பட்டது என்றும், மத்தியில் திமுக கூட்டணியின்போதுதான் நீட் தேர்வு மசோதா நிறைவேற்றப்பட்டது என்றும் திமுக-அதிமுக மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர்.


காங்கிரஸ்…
நீட் தேர்வு வேண்டாம் என தமிழகமே ஓரணியில் நின்றபோது, உச்ச நீதிமன்றத்தில் நீட் க்கு ஆதரவாக வாதாடி வென்றவர் வழக்கறிஞர் நளினி சிதம்பரம். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சிதம்பரத்தின் மனைவி. கல்வியில், மருத்துவத்தில் சமூகநீதி புறக்கணிக்கப்படுகிறது எனக் கூறிக்கொண்டு, சமூக நீதிக்கு எதிரான ஒரு வழக்கில் தீர்ப்பு வாங்கினார் நனினி சிதம்பரம்.

நீட் தேர்வு விவகாரம் – அரசியல் கட்சிகளின் அறிக்கை போர்


மாணவர்கள் உயிரிழப்பும், மன அழுத்தமும் அதிகரித்து வருவது தெரிந்தும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் நீட்தேர்வு வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

திமுக…
காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தபோதுதான் நீட் மசோதா நிறைவேற்றப்பட்து. எனவே மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் என்கிறது அதிமுக. இந்த நிலையில், இப்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறார் மு.க.ஸ்டாலின் என குற்றம் சாட்டுகின்றனர்.

நீட் தேர்வு விவகாரம் – அரசியல் கட்சிகளின் அறிக்கை போர்


நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறும் திமுக, தங்கள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் நீட்தேர்வு இல்லாமல் மருத்துவ இடங்களை அளிப்பார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர் எதிர்கட்சியினர்.

அதிமுக…

ஆனால், ஐமு கூட்டணி அரசு இருந்தபோதே நீட் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், திமுகவை இப்போதும் வம்பிழுத்து குற்றம்சாட்டுவது நியாயமா? என திமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் அதிமுக அரசுதான் நீட் தேர்வை கொண்டு வந்தது என குற்றம் சாட்டுகிறது திமுக.

நீட் தேர்வு விவகாரம் – அரசியல் கட்சிகளின் அறிக்கை போர்

இப்படி மாறி மாறி குற்றம் சாட்டும் நிலையில், நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்கிற முடிவுக்கு தமிழக கட்சிகளிடையே ஒருமித்த கருத்து வேண்டும் என்கிறனர் சமூக ஆர்வலர்கள்.

பாமக, தேமுதிக…
நீட் வேண்டாம் என்கிற பாமக, மத்தியில் அங்கம் வகித்தபோது அமைச்சராக இருந்த அன்புமணி ஏன் அழுத்தம் தரவில்லை?, என்றும் சுதீஷுக்கு எம்பி சீட் வேண்டும் என பாஜவுக்கு அழுத்தம் கொடுத்த தேமுதிக, நீட் வேண்டாம் என ஏன் அழுத்தம் தரவில்லை என ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பிக் கொள்ள முடியும்.

நீட் தேர்வு விவகாரம் – அரசியல் கட்சிகளின் அறிக்கை போர்

இப்படி, மாணவர்களின் மரணங்களுக்கு பின்னால் கேள்வி கேட்பதைவிட, இனி வரும் காலங்களில் நீட் பெயரால் எந்த ஒரு மாணவரும் உயிரிழக்கூடாது என்கிற சூழலை உறுதிபடுத்த, அரசியல் கட்சிகள் ஆக்கபூர்வ வேலைகளை செய்யவேண்டும் என்பதே அவைவரது எதிர்பார்ப்பும்.
-தமிழ்தீபன்