கொரோனாவால் இறந்தவர்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா!

கொரோனாவால் இறந்தவர்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா!

கொரோனா இரண்டாம் அலையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உயிரிழப்போரின் உடல்கள் மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது இல்லையெனன வெகுவாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு மனித உரிமை ஆணையமும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கொரோனாவால் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்யும் மகத்தான பணியை ஈஷா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவால் இறந்தவர்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா!

ஈஷா சார்பில் நாமக்கல் மற்றும் நெய்வேலியில் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு ஈஷா ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தங்களது உயிரையும் பணயம் வைத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்து வருகிறார்கள். சவால் மிகுந்த இந்த பணியை ஈஷா ஊழியர்கள் பாதுகாப்போடு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஈஷா சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.

கொரோனாவால் இறந்தவர்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா!

அவர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி தினமும் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குவது, சத்தான உணவுகளை வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் யோகா பயிற்சிகளை கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது.

கொரோனாவால் இறந்தவர்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா!

அந்த மின் மயானத்தில் காலபைரவர் சன்னதி இருப்பதால் மயானமும், கோவிலும் புனிதமாக பராமரிக்கப்படுகிறது. மயானத்திற்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் ஈஷா ஊழியர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கொரோனாவால் இறந்தவர்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா!

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
“ஈஷா மயானங்களில், காலமானவர்களை உகந்த சூழலில் நுண்ணுணர்வுடன் விடுவிக்க
தன்னார்வத் தொண்டர்கள் அயராதுஉழைக்கிறார்கள்.இது வாழ்வோருக்கும் விடைபெறுவோருக்கும் மிகவும் முக்கியம். ஆசிகள்” என்று தெரிவித்துள்ளார்.