திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவமா ?

 

திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவமா ?

கொரோனா பீதியை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை முழு வீச்சில் தொடங்கி விட்டன. வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?என்ன செய்தால் வெற்றி பெறலாம்? என்பதை ஒவ்வொரு கட்சிகளும் அரசியல் ஆலோசகர்கள் குழுக்கள் அமைத்து அதற்கேற்ப செயல்படத் தொடங்கி விட்டன.

அந்த வகையில் திமுக, ஒரு முக்கிய முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை,காலம் காலமாக இரட்டை இலைக்கு ஓட்டு போட்டவர்கள் இரட்டை இலைக்கும், உதய சூரியனுக்கு ஓட்டுப் போட்டவர்கள் உதய சூரியனுக்கும்தான் ஓட்டு போட்டு வருகின்றனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவமா ?

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என ஒன்றிப் போனவர்களை உற்சாகப் படுத்தினாலே போதும். புதுப்பிக்க தேவையில்லை. அதே சமயம் புதிய வாக்காளர்களாக இளைய தலை முறையினர் உருவாகி இருக்கின்றனர்.இந்த இளைய தலைமுறையினரை வசப்படுத்தினால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற ஆலோசனை திமுக மேலிடத்திற்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவமா ?

திமுகவின் இணைய தள திட்டமான “எல்லோரும் நம்முடன்..” “திமுகவோடு இணைவோம்” என்ற திட்டம் இந்த ஆலோசனையின் அடிப்படையில் உருவானதுதான். இணைய தளத்தை முழுக்க முழுக்க பயன் படுத்துபவர்கள் இளைஞர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்டு ஆரம்பித்த இந்த திட்டத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படி இணையதளம் வழியாக சேரும் இளைஞர்களை தொடர்பு கொண்டு கட்சிப் பணியாற்ற அழைப்பு விடுக்கும் திட்டமும் இருக்கிறது. அடுத்தகட்டமாக “வாட்ஸ் அப்” எனப்படும் சமூக வலைத் தளங்கள் மூலமும் இளைஞர்களைத் தொடர்பு கொள்வதோடு தமிழகம் முழுவதும் வித்தியாசமான வாட்ஸ் அப் குரூப் தொடங்கும் திட்டமும் இருக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவமா ?

இதுவல்லாமல் திமுகவை பொறுத்தவரை ஒரு குழுவினர், தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.தேர்தல் களத்தில் முதன் முதலில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிற கட்சி திமுகவாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

முக்கியமாக இந்த முறை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் இளைஞர் அணி நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். உதயநிதி தனிப்பட்ட முறையில், ஒரு மூத்த பத்திரிகையாளர் தலைமையில் ஒரு டீம் உருவாக்கியுள்ளதாகவும், அந்த குழுவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவமா ?

தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க உள்ளார்களாம். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கு வேலை என்ற அறிவிப்பு வெளியாக காத்திருக்கிறது.
இது தவிர இளைஞர்கள், இளம் பெண்கள் வீட்டிலிருந்தபடியே இணயதள வழியாக வேலை செய்யும் புதிய திட்டம், தொழில் தொடங்க பட்டதாரிகளுக்கு ரூ 5 லட்சம் வரை கடன் உதவி, மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து, வேலையில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ 3 ஆயிரம் உதவித் தொகை என இளையதலை முறை தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க உள்ளதாக சொல்லப் படுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது,வியாபாரிகளுக்கான கடன் திட்டம் முதியோர் உதவித் தொகை ரூ 2000 ஆக உயர்வு என்பது போன்ற அம்சங்களும் இருக்குமாம்.

திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவமா ?

இந்த தகவல்களை எல்லாம் பகிர்ந்து கொள்ளும் திமுகவினர் முக்கியமான குறிப்பிடுவது, கலைஞருக்கு ஸ்டாலின் இருந்து, தேர்தல் பணிகளை செய்து வந்ததைப் போல, மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி வேலைகளை செய்ய உள்ளார் என்கின்றனர். இளைஞர் அணி வலுவாக இருக்கும் கட்சிக்கு இளைஞர்களை திரட்டுவது எல்லாது எல்லாம் சாதாரண வேலை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

-போஸ்