மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் தேதி இதுதானாம்? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

 

மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் தேதி இதுதானாம்? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் போஸ்டர் புரொடக்ஷன் முடிந்து தயாரான நிலையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணாமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் தேதி இதுதானாம்? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

இதை தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளியாகும் என இணையத்தில் செய்திகள் உலா வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேற்று படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் திரையரங்குகளில் படம் வெளிவந்த பிறகே அடுத்த ஓடிடி வெளியாகும். எனவே ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் தேதி இதுதானாம்? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் பட்சத்தில் ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.