’சசிகலாவைச் சேர்த்துகொள்ள வேண்டும்’ குருமூர்த்தியின் பேச்சுக்கு இந்த சர்வேதான் காரணமா?

 

’சசிகலாவைச் சேர்த்துகொள்ள வேண்டும்’ குருமூர்த்தியின் பேச்சுக்கு இந்த சர்வேதான் காரணமா?

திமுக – அதிமுக இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு தொடர்ந்து பேசி வருகின்றன. எந்தக் கட்சியும் தங்கள் கூட்டணியை விட்டு அகன்றுவிடக்கூடாது என தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதேபோல அதிமுக கூட்டணியில், பாமக, தேமுதிக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

’சசிகலாவைச் சேர்த்துகொள்ள வேண்டும்’ குருமூர்த்தியின் பேச்சுக்கு இந்த சர்வேதான் காரணமா?

தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தன் தேர்தல் வியூகத்தைப் பற்றி அதிகம் பேச வில்லை. இந்நிலையில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி திமுகவை வீழ்த்தும் உத்தியைப் பற்றி துக்ளக் விழாவில் பேசியிருந்தார்.

”வீடு பற்றி எரியும்போது கங்கை நீர் வரட்டும் எனக் காத்திருக்கக்கூடாது. சாக்கடை நீராக இருந்தாலும் பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டும்” என்றார். இதையே நான் திமுகவை விலக்குவதற்கான பதிலாகச் சொல்கிறேன். அப்படித்தான் சசிகலாவாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி. வீட்டை அணைக்க கங்கை நீருக்காகக் காத்திருக்க முடியாது” என்று பேசினார்.

’சசிகலாவைச் சேர்த்துகொள்ள வேண்டும்’ குருமூர்த்தியின் பேச்சுக்கு இந்த சர்வேதான் காரணமா?

அவரின் பேச்சின் சாரம் என்பது திமுகவை வீழ்த்த சசிகலாவை அதிமுக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே. இந்தப் பேச்சு அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனெனில், ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்த பின்னணியில் குருமூர்த்தி இருந்ததாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது குருமூர்த்தியே சசிகலாவை அதிமுக பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு பின்னணியில் ஒரு சர்வே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

lok poll எனும் நிறுவனத்தின் Tamilnadu legislative Assembly Elections 2021 எனும் பெயரில் ஒரு சர்வே முடிவு வெளியானது. அந்தச் சர்வேயில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180- 185 தொகுதிகள் வெல்லும். 46 -47 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக கூட்டணி 45 – 50 தொகுதிகளை வெல்லும், 35 -36 வாக்கு சதவிகிதத்தைப் பெறும் என்றும் தெரிவித்திருந்தது.

’சசிகலாவைச் சேர்த்துகொள்ள வேண்டும்’ குருமூர்த்தியின் பேச்சுக்கு இந்த சர்வேதான் காரணமா?

அடுத்ததுதான் முக்கியம். தினகரனின் அமமுக கட்சி 1 – 3 தொகுதிகள் வெல்லும் 6 – 7  வாக்கு சதவிகிதத்தைப் பெறும் என்று தெரிவித்திருந்தது.

இந்த சர்வே முடிவின் படி சசிகலா – தினகரனை அதிமுக பயன்படுத்திக்கொண்டால் அக்கூட்டணியில் வாக்கு சதவிகிதம் 40 சதவிகிதத்தைக் கடந்துவிடும். தொகுதிகளும் அதிகரிக்கும் என்பதுதான் கணக்கு என்று பேசப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளிவர இன்னும் 10 நாட்கள்தான் இருக்கும் நிலையில் இது முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.