Home உலகம் ’விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு இந்த நாடே காரணம்’ ஈரான் அமைச்சர் சுட்டும் நாடு?

’விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு இந்த நாடே காரணம்’ ஈரான் அமைச்சர் சுட்டும் நாடு?

ஈரான் நாட்டில் மிக உயர்ந்த விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி அறிவுலக வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி மெஹ்சென் ஃப்க்ஹிஸாத் (Mohsen Fakhrizadeh) மிகவும் புகழ்பெற்றவர். அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக தலைவராகவும் பணியாற்றுபவர். ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஈரானிய ராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகள் இணைந்து தம் பங்களிப்பைச் செலுத்தியவர்.

ஈரானின் அணு ஆயுத சோதனை தகவல்களால், மெஹ்சென்னுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்கெனவே இருந்தது. அதனால், அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

நேற்று ஈரானிய தலைநகரான தெஹ்ரானில் மெஹ்சென் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, யார் என அடையாளம் காண முடியாத சிலர் வெடிகுண்டுகள் மூலம் அவர் கார் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதனால், படுகாயம் அடைந்த விஞ்ஞானி மெஹ்செனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டார்.

Javad Zarif (Minister of Foreign Affairs)

இந்தத் தாக்குதலை யார் நடத்தினார் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஆயினும், ஈரானில் வெளியுறவு அமைச்சர் ஷாரிஃப் அதிரடியான தகவலைக் கூறியுள்ளார். ‘இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு முழு காரணம் இஸ்ரேல்தான் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடி இருக்கும் என ஈரானில் ராணுவ தளபதி ஏற்கெனவே கூறியிருந்தார். எனவே, இந்த விவகாரம் பெரியதாக வெடிக்கவே வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

புதுச்சேரி காங்கிரஸில் காலியான முக்கிய விக்கெட்… தாமரையை மலர வைக்க பாஜக போடும் கணக்கு பலிக்குமா?

தென்னிந்தியாவில் கால் பதிக்கும் நோக்கில் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதன் முதல் அடித்தளமாக அமைச்சர் நமச்சிவாயத்தை இன்று ராஜினாமா செய்யவைத்து,...

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – மலை கிராமங்களுக்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, முதுவாக்குடி, முந்தல், சிறைக்காடு, சோலையூர் ஆகிய பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

‘நான்கு தலைநகரம்’ – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு!

இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்ற மம்தா பேனர்ஜியின் கோரிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,...

காங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்

கமல்ஹாசன் தங்களது கூட்டனிக்கு வரவேண்டும். இல்லையென்றால் ஓட்டுக்கள் வீணாக சிதறிவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து வலுயுறுத்தி வந்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!