தொகுதி பங்கீட்டில் கலகலக்கப் போகிறதா திமுக கூட்டணி!

 

தொகுதி பங்கீட்டில் கலகலக்கப் போகிறதா திமுக கூட்டணி!

இன்னும் சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க விருக்கிறது தமிழ்நாடு. இதில் திமுக – அதிமுக தலைமையிலான கூட்டணிகளே பிரதானமான போட்டி நடக்கப்போகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன என்ற தோற்றம் வெளியே தெரிகிறது. அது உண்மைதான். ஆனால், தொகுதி பங்கீட்டில் எந்தக் கட்சியும் விட்டுக்கொடுக்காது என்பதும் உண்மையே.

தொகுதி பங்கீட்டில் கலகலக்கப் போகிறதா திமுக கூட்டணி!

திமுகவில் பெரிய கட்சி என்றால் காங்கிரஸ். 63 தொகுதிகள்கூட வாங்கிய கட்சி காங்கிரஸ். அதனால் இம்முறையும் அதிக தொகுதிகள் எனும் கனவில் இருந்தது. ஆனால், டெல்லி காங்கிரஸ் அதை வலியுறுத்த வேண்டும் என்று நினைக்க வில்லை. திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்றே நினைக்கிறது. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு திமுக முழு ஆதரவு அளித்ததால் இந்த முடிவு எடுத்ததற்காக விட்டுக்கொடுக்க முடிவு எடுத்துள்ளது.

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோ 35 – 40 எனும் அளவில் இருக்க வேண்டும் என நினைக்கிறது. ஆனால், திமுகவோ 20 – 25 என்பதாகவே திட்டமிட்டிருக்கிறது. இன்னும் சொல்வதென்றால் 20 க்குள் முடிக்கவே திமுக தரப்பு விரும்பிகிறது.

தொகுதி பங்கீட்டில் கலகலக்கப் போகிறதா திமுக கூட்டணி!

சிபிஎம். சிபிஐ கட்சிகளைப் பொறுத்தவரை 12 – 15 என்று கணக்கு வைத்திருக்கிறது. ஆனால், திமுக தரப்பிலோ இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 15 என்றும் முடிவெடுத்துள்ளதாம்.

மதிமுகவைப் பொறுத்தவரை குறைந்தது 10 என்று காத்திருக்கிறது. திமுகவோ 6 தொகுதிகள்தான். அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டாம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை முடிந்தவரை இக்கூட்டணிக்கு உதவுவோம் என்று சொன்னாலும், அவர்களும் 10 – 12 எனும் கணக்கில் அதாவது இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் (ஒரு தொகுதிக்கு 6 சட்டமன்ற தொகுதி எனும் கணக்கில்) என்று எதிர்பார்க்கின்றனராம். திமுகவில் 5 தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு என முடிவாம். கூடுதல் தொகுதிகள் கேட்டால் 8 தொகுதி வரை கொடுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

தொகுதி பங்கீட்டில் கலகலக்கப் போகிறதா திமுக கூட்டணி!

பன்ருட்டி வேல்முருகன், முஸ்லீம் லீக், கொங்கு ஈஸ்வரன்  ஆகியோருக்கு தலா 2 என்று கணக்காம். ஆனால், அனைவரும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமாம். உதயசூரியன் சின்னம் 180 தொகுதிகள் போட்டியிட வைக்க வேண்டும் என்பதே திமுக திட்டமாம்.

ஆனால், கூட்டணி கட்சிகள் திமுக இப்படிக் கிள்ளி கொடுப்பதை ரசிக்க வில்லையாம். இரண்டு ஆண்டுகளாக தோளோடு தோள் நின்றதற்கு இது சரியில்லை என்ற கருத்தும் நிலவுகிறதாம். இதனால், கூட்டணியில் மாற்றம் வருமா என்று எதிர்தரப்பு காத்திருக்கிறதாம்.