இந்தியா – ஆஸ்திரேயா தொடர் : மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியா?

 

இந்தியா – ஆஸ்திரேயா தொடர் : மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியா?

கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்க்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 27 – லிருந்து ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன இரு அணிகளும்.

நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், டிசம்பர் 4, 6 மற்றும் 8 -ம் தேதிகளில் டி20 போட்டிகளும் நடக்க விருக்கின்றன.

இந்தியா – ஆஸ்திரேயா தொடர் : மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியா?

முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ம் தேதியும், இரண்டாம் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதியும், மூன்றாம் டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ம் தேதியும், நான்காம் டெஸ்ட் போட்டி ஜனவரி 15-ம் தேதியும் தொடங்குகிறது.

இதற்கான அணிகளும் வீரர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். டி20 அணியில் இருந்த தமிழக வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் தமிழக வீரர் நடராஜன் தங்கராசு சேர்க்கப்பட்டிருக்கிறார்.

காயம் காரணமாக, ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடாத ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறார். முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் சொந்த வேலைகாரணமாக கேப்டன் கோலி இந்தியா திரும்புகிறார். அதனால், மீதமுள்ள போட்டிகளை ரோஹித் ஷர்மா கேப்டனாக வழிநடத்துவார் என்று தெரிகிறது.

இந்தியா – ஆஸ்திரேயா தொடர் : மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியா?

கொரோனா அச்சம் காரணமாக மைதானங்களில் ரசிகர்களை அனுமதிக்க முடியாத நிலையே இருக்கிறது. அதனால்தான் ஐபிஎல் போட்டிகள்கூட ஐக்கிய அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா – இந்தியா தொடரில் நடக்கும் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. 50 சதவிகித ரசிகர்கள் என இப்போதைக்கு முடிவெடுத்துள்ளது. சில போட்டிகளுக்கு 75 சதவிகிதம் அனுமதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சூழலைப் பொறுத்து இந்த முடிவில் மாற்றம் இருக்கலாம்.