வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

 

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

முருகக் கடவுளை முன்வைத்து கடந்த 20 நாட்களுக்கு மேல் தமிழக பாஜக வேல் யாத்திரையை நடத்தி வருகிறது.
திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை திருச்செந்தூரில் முடிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

தமிழக அரசின் அனுமதியை மீறி இந்த யாத்திரை நடந்து வருகிறது. முக்கிய நகரங்களில் இந்த யாத்திரையை ஒட்டி தமிழக பாஜக தலைவர் முருகன், மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் வழிபாடு நடத்துவதும் அங்கிருந்து யாத்திரையைத் தொடங்குவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த யாத்திரையை ஒட்டி பொதுமக்கள் திரளாக கூடுவதால் கொரோனா
அச்சம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் அதையும் தாண்டி, தமிழக பாஜக எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் யாத்திரையை தொடர்ந்து வருகிறது. இடையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகையை ஒட்டி இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டும் யாத்திரை நடத்தப்படவில்லை.

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

இந்த நிலையில் இந்தக் கூட்டத்துக்கு பரவலாக கூட்டம் கூடுகிறது என்கிற கருத்தும் உருவாகியுள்ளது. திருவண்ணாமலையில் நடந்த இந்த கூத்துதான், கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதன் பின்னர், அமித்ஷா வருகை ஒட்டி 2 நாட்கள் நிறுத்தப்பட்டன. தற்போது புயல் மழை காரணமாகவும் சில நாட்கள் நிறுத்தி உள்ளனர்.பல இடங்களில் மக்கள் திரளாக கூடுகின்றனர் என புகைப் படங்கள் வெளிவருகின்றன. இதையொட்டி வீடியோ ஒன்றும் உலா வருகிறது. அந்த வீடியோவில் சில பெண்கள் மேள தாளத்திற்கு ஏற்ப குத்தாட்டம் ஆடுகின்றனர். பக்தி பரவசத்தோடு திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரைக்கு, மேளதாளங்கள்- பட்டாசுகள், பாரத் மாதா கி ஜே என ஆன்மிக யாத்திரைக்கு தொடர்பில்லாத சங்கதிகளையும் பாஜக சேர்த்திருந்தது.

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

ஆன்மீக யாத்திரைகளில் பல்வேறு வடிவங்களை தமிழகம் கண்டிருக்கிறது. உண்மையான ஆன்மீக யாத்திரை என்றால், ஆன்மீக கருத்துக்களை பரப்புவது என்கிற நோக்கம் இருந்தால், முருகனுக்கு காவடி தூக்குவது , அலகு குத்துவது, இதுபோன்ற நடவடிக்கைகள் செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் மக்களிடம் நம்பிக்கையை பெற முடியும். இது ஆன்மிக யாத்திரை என்ற நம்பிக்கை கிடைத்திருக்கும் . ஆனால் அரசியல் நோக்கத்திற்காக, அரசியல் தேவைக்காக, மக்களை மேலும் ஏமாற்றும் விதமாகவே ஆன்மிக யாத்திரை என்ற பெயரில் சினிமா நடிகைகளின் குத்தாட்ட நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருகிறது. அரசியல் செய்வதற்கு நேரடியாக களத்தில் நின்று அரசியல் வேலைகளை செய்யாமல், ஆன்மீகத்தின் பெயரில் இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொள்வது வேதனையாக இருக்கிறது என்கின்றனர் உண்மையான ஆன்மீகவாதிகள். ஆன்மீகமும் இல்லாமல் அரசியலும் இல்லாமல் ஆன்மீக அரசியல் என மக்களை திரட்டுவதற்கு, குத்தாட்ட நடிகைகள் உதவியோடு அரசியல் செய்வது இதுவரை தமிழகம் அறியாதது என்கின்றனர் அரசியல் வாதிகள்.

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

அரசியல் நிகழ்ச்சிகள் , அரசியல் பிரச்சாரங்களில் சினிமா கலைஞர்கள் கரக கலைஞர்கள், மேளதாளங்கள் என நடத்துவதுண்டு. அவற்றை அரசியல் நிகழ்ச்சியாக மக்கள் உணர தொடங்கிவிட்டனர். ரசிக்கத் தொடங்கி விட்டனர் . ஆனால், ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஒரு பொதுவான பக்தி தன்மை உண்டு. அந்த பொது பக்தி தன்மையை சிதைத்து, ஆன்மீகமும் இல்லாமல், அரசியலும் இல்லாமல் இரண்டையும் கேள்விக்குள்ளாக்குகிறது தமிழக பாஜக என்கிற சாட்டை முன்வைக்கின்றனர் ஆன்மீகவாதிகள். இப்படி பாஜகவின் இரட்டை வேடத்திற்கு, இந்த நடிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் எல். முருகன் என்கிற கேள்வியை முன் வைக்கின்றனர் விமர்சகர்கள். முருகக் கடவுளை பரப்புவதற்கு குத்தாட்ட நடிகைகளின் உதவி தேவையா? என்பதை தமிழக பாஜக உணர்ந்து கடவுளை இழிவு படுத்துவதை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றனர் உண்மையான ஆன்மீக பக்தர்கள்.

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

முருகன் பெயரால் வேதனை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை உணர்வார்களா ? கடவுள் பெயரால் அரசியல் செய்பவர்கள் என்று மக்கள் குமுறி வருகின்றனர். பரபரப்பாக தொடங்கிய ஆன்மீக யாத்திரை இப்படி கூட்டம் கூட்டுவதற்காக குத்தாட்டத்தை பயன்படுத்துவது யார் கொடுத்த ஐடியா? என்கிற கேள்வியும் அந்தக் கட்சியினரே முன்வைக்கின்றனர். பாஜகவினரே முகம் சுளிக்கும் இந்த நடவடிக்கையை நிறுத்தி தமிழக பாஜக பொறுப்போடு உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.