Home விளையாட்டு கிரிக்கெட் ரெய்னா இல்லாததுதான் CSK தொடர் தோல்விகளுக்குக் காரணமா? #IPL

ரெய்னா இல்லாததுதான் CSK தொடர் தோல்விகளுக்குக் காரணமா? #IPL

மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடியுள்ள CSK, ஒன்றில் மட்டும் வெற்றியும் மற்ற இரண்டில் தோல்வியும் பெற்றுள்ளது.

பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் டீமோடு மோதி வெற்றி பெற்றது தோனி படை. ஆனால், ராஜஸ்தான், டெல்லி ஆகிய எளிதாக வெல்லக்கூடியவை என கருதப்பட்ட இந்த இரண்டு டீம்களிடம் தோற்றுவிட்டது.

நேற்று நடந்த டெல்லி அணியோடு மோதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஏன் இந்தத் தோல்வி…. இந்தத் தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம்?

தோல்வி அடைந்த இரண்டு போட்டிகளுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் அதுவும் தொடக்க வீரர்களில் டி பிளஸியைத் தவிர மற்றவர்கள் சொதப்பி விட்டார்கள். குறிப்பாக, முரளி விஜய் மூன்று போட்டிகளிலுமே அணிக்குத் தேவையான ரன்ரேட்டை மனதில் வைத்து ஆடியதைப் போலவே தெரியவில்லை.

அதேபோல ராயுடுக்கு பதில் இறக்கப்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட்  முதல் மேட்சில் டக் அவுட், இரண்டாம் மேட்சில் 10 பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். கேதர் ஜாதவ் 22, 26 ரன்களோடு திருப்தி பட்டு திரும்பி விடுகிறார். வாட்சன் நம்பிக்கையோடு ஷாட்களை ஆடுவதுபோலவே தெரியவில்லை.

தோனி இறங்கும் இடம் கடந்த 2 போட்டிகளிலும் விமர்சனம் செய்யப்பட்டது. ராஜஸ்தானோடு 7 –ம் டத்தில் இறங்கினார்.  டெல்லி மேட்சில் 6-ம் இடத்தில் இறங்கினார். இரண்டு போட்டிகளிலும் அவர் 5 –ம் இடத்தில் இறங்கியிருந்தால் ஒரு மேட்சிலாவது வெற்றி கிடைத்திருக்கக்கூடும்.

தோனி இறங்கும் இடம் குறித்து இத்தனை போட்டிகளாக இந்த பிரச்சனை வராமல், இப்போது ஏன் வருகிறது என்ற கேள்வி வருகிறது அல்லவா… ஒருவேளை சுரேஷ் ரெய்னா இந்தப் பிரச்சனையை வர விடாமல் செய்திருக்கார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், சென்ற ஆண்டுகளில் மூன்றாம் இடத்தில் இறங்கிய சுரேஷ் ரெய்னா மேட்ச் செல்லும் தன்மைக்கேற்ப அடித்து ஆடியோ, விக்கெட்டைத் தற்காத்துக்கொண்டோ ஆடியிருக்கிறார்.

சுரேஷ் ரெய்னா பந்துகளை விரயம் செய்யாமல், 40 ரன்கள் என்பதை உறுதி செய்துவிடுவார். டி20 போட்டிகளில் இது முக்கியமான ஆவரேஜ்தான். சென்ற ஆண்டு டெல்லியோடு நடந்த மூன்று போட்டிகளிலும் சென்னையே வென்றது அவற்றில் இரண்டு போட்டிகளில் சுரேஷ் 59, 30 அடித்திருந்தார்.

சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சுமை தராத விதமாக இருந்தது. ஆனால், தற்போதைய ஆர்டரில் பெரும் சுமையை மிடில் ஆர்டர் மேல் வைப்பதுபோல தொடக்க வீரர்கள் பந்துகளை விரயம் செய்துவிடுகிறார்கள் . ரன்ரேட்டையும் மெயிண்டெய்ன் செய்வதில்லை.  சுரேஷ் ரெய்னாவின் இழப்பு நிச்சயம் இந்த விஷயத்தில் பின்னடைவைத் தருகிறது என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

ரெய்னா இல்லாதது மட்டுமல்ல, CSK வின் ஸ்பின் பவுலர்களும் ரன்களை வாரி வழங்குகிறார்கள். பேட்ஸ்மேன் ஆடும் விதம் குறித்து அறிந்து, அதற்கேற்ப பவுலிங் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில்லை. ‘ஒரு பேட்ஸ்மேன் தனது பந்தை அடித்து ஆடினால் பந்து வீச்சின் வேகத்தைக் குறைத்துவிடுவேன்’ என்று புகழ்பெற்ற ஸ்பின் பவுலர் ஷேர் வார்னே சொல்லியிருக்கிறார். ஆனால், நமது டீமில் அடிக்க, அடிக்க பவுலிங் வேகத்தை அதிகப்படுத்துகிறார்கள்.

இந்தத் தொடர் சரிவிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டெழுந்து, ஹைதராபாத் அணியோடு ஆடும் அடுத்த மேட்ச்சில் வெல்லும் என்றே நம்புவோம். அதற்கேற்ப அணியில் பல மாறுதல்கள் நடக்கும் என்றே தெரிகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஈரோடு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – 3 பேர் கைது

ஈரோடு அருகே கூலிப்பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் வீரப்பன்(19)....

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா டாலர் பறிமுதல்

கொரொனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சூழலைக் கடத்தல் காரர்களும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் ஓரிரு மாதங்களாக தங்கம், கரன்சி கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் இது அதிகரித்திருக்கிறது.

டார்ச்சர் தந்த டாக்டர்கள்! துப்பட்டாவில் தூக்கிட்டு நர்ஸ் தற்கொலை

குஜராத் மாநிலம் சூரத்தில் மேகா ஆச்சார்யா(28) என்ற பெண் நர்ஸாக இருந்து வந்தார். மேகாவின் கணவர் வேலை நிமித்தமாக வெளி ஊரில் தங்கி இருந்த நிலையில், மேகா வீட்டில் துப்பாட்டாவால்...

முதல் இடத்துக்கு முன்னேறுமா டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஹைதராபாத் vs டெல்லி!

ஐபிஎல் தொடரில் நான்கு அணிகள் 12 போட்டிகள் ஆடி விட்டன. அதிலிருந்து பாயிண்ட் டேபிளில் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டன. இன்றைய போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் vs...
Do NOT follow this link or you will be banned from the site!