மீண்டும் லாக்டெளனுக்குத் தயாராகிறதா இலங்கை?

 

மீண்டும் லாக்டெளனுக்குத் தயாராகிறதா இலங்கை?

கொரோனா பரவலைத் தடுக்க முதல் ஆயுதமாக அந்தந்த நாடுகள் பயன்படுத்துவது லாக்டெளனைத்தான்.

மீண்டும் லாக்டெளனுக்குத் தயாராகிறதா இலங்கை?

இலங்கையில் இன்றைய தேதி வரை கொரொனாவின் மொத்த பாதிப்பு 3,733 பேர். அவர்களில் 3,259 பேர் சிகிச்சை பலனால் குணம் அடைந்துவிட்டனர். 13 பேர் இதுவரை கொரோனாவால் இலங்கையில் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இலங்கையில் சில பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

மீண்டும் லாக்டெளனுக்குத் தயாராகிறதா இலங்கை?

நேற்று மட்டுமே 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜுலை 12-ம் தேதிதான் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா உறுதி செய்யப்பட்ட தினம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நூறைக் கடந்துள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கம்பஹ மாவட்டத்தில் அதிகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இருக்கிறார்களாம். அதேபோல வடப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர்கள் இந்திய மீனவர்களோடு பேசிக்கொண்டிருப்பது போன்ற செயல்களால் வந்திருக்கலாம் என்றும் யூகிக்கிறார்கள். யாழ்ப்பாணம் பகுதியில் 13 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

மீண்டும் லாக்டெளனுக்குத் தயாராகிறதா இலங்கை?

இந்நிலையில் இலங்கையில் எந்நேரமும் லாக்டெளன் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் உள்ளது. இலங்கை அமைச்சரவை கூடியபோது, கோவிட் -19 பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நாளை (அக்டோபர் 7) லாக்டெளன் அறிவிக்கப்படலாமா… வேண்டாமா என்று முடிவெடுக்கப்படும் என வரையறுத்துள்ளது.

அடுத்து வரும் 48 மணி நேரம் நோய்ப் பரவலைத் தடுக்க முக்கியமான காலம் என்றும் மக்களை எச்சரித்துள்ளது இலங்கை அரசு.