மலையும் மழையும்தான் கேரள விமான விபத்துக்கு காரணமா?

 

மலையும் மழையும்தான் கேரள விமான விபத்துக்கு காரணமா?

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலையும், மழையும்தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்குமா என்று பேசப்படுகிறது.

191 நபர்களுடன் துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் நேற்று இரவு 7.40 மணிக்கே கோழிக்கோட்டில் தரையிறங்க முயற்சித்தது. ஆனால், கனமழை பெய்ததால் தரையிறக்க முடியவில்லை. இரண்டாவது முயற்சிலும் தரையிறக்க முடியவில்லை. மூன்றாவது முயற்சியில் தரையிறக்கும் முயற்சியில் அதிவேகமாக விமானம் ஓடுதளத்தில் ஓடும்போது மழையினால் சறுக்கியுள்ளது. இதனால் விமானி வேகத்தை குறைத்துள்ளார்.

மலையும் மழையும்தான் கேரள விமான விபத்துக்கு காரணமா?

கோழிக்கோடு விமான நிலையம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. விமான நிலையத்தின் ஓடுபாதைகளின் முடிவில் பள்ளத்தாக்குகள் உள்ளன. இதனால் சறுக்கிய விமானம் ஓடுபாதையை தாண்டி பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டாக உடைந்து நொறுங்கியுள்ளது.

மலையும் மழையும்தான் கேரள விமான விபத்துக்கு காரணமா?

கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டேப் முறையில் அமைக்கப்பட்டிருப்பதும் இந்த விபத்துக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. விமானி வேகத்தை குறைத்ததாலும், அதிர்ஷ்டவசமாக விமானம் உடைந்ததில் தீப்பிடிக்காததாலும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

விபத்து நடந்த இடத்தில் மீட்புபணிகள் நடந்து வருகிறது. விபத்து நடந்தகுறித்த விசாரணைகளும் நடந்து வருகிறது.