அரசு செய்வதை தடுக்கிறாரா மு.க.ஸ்டாலின் ? மக்கள் ஆவேசம்

 

அரசு செய்வதை தடுக்கிறாரா மு.க.ஸ்டாலின் ? மக்கள் ஆவேசம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின், அடுத்த கட்ட அலை வரும் மாதங்களில் வேகமெடுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். தமிழகத்தில் முதற்கட்ட அலை , அரசின் அதிரடி நடவடிக்கையால் பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மருத்துவர்கள் அடுத்த கட்ட அலை குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேரில் சென்று ஆய்வு செய்வதுடன், பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டப்பணிகளையும் தொடக்கிவைத்து வருகிறார்.

அரசு செய்வதை தடுக்கிறாரா மு.க.ஸ்டாலின் ? மக்கள் ஆவேசம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் போல, வேறு எந்த மாநில முதலமைச்சரும் , கொரோனா காலத்தில் மக்களை நேரில் சந்திக்கவில்லை என்றே சொல்லலாம். கொரோனா அச்சம் காரணமாக வீடியோ கான்பரன்சிங் முறையில், அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் முதலமைச்சர்களுக்கு மத்தியில், மிகுந்த கவனமுடன் மக்களை நேரில் சந்திக்கும் முதலமைச்சராக எடப்பாடி உள்ளார்.
அதன் காரணமாகவே மக்கள் மத்தியில், மிகுந்த செல்வாக்கு பெற்று வருவதுடன், மக்களின் தேவைகள், பிரச்சினைகளை நன்கு அறிந்தவராகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

அந்த வகையில், இன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், செய்தியாளர்களிடம் பேசுகையில் முக்கியமாக அறிவிப்பினை வெளியிட்டார்.

குறிப்பாக, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழக மக்களுக்கு அரசின் செலவில் போடப்படும் என்ற அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு மிகப்பெரிய நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் இப்படியான அறிவிப்புகளை மக்களை கவரும் என்றாலும், தமிழக அரசின் தொடர்ச்சியான நலத்திட்டங்களில் இதுவும் முக்கியமான ஒன்று என்பதாகவே அனைவரும் கூறுகின்றனர்.

இந்த அறிவிப்புக்கு பின்னர், சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமி குறித்து, பலரும் புகழ்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பதிவில் அவரது ’வயிற்றெரிச்சல்’ தெரிவதாக பலரும் கருத்து கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார்

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதலமைச்சர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு மூலம், அரசின் எந்த அறிவிப்பையும் எதிர்க்கும் எண்ணம் மட்டுமே ஸ்டாலினிடம் உள்ளது. மக்கள் நலத் திட்டம் என்றால், அதை வரவேற்கும் பண்பு இல்லை என விமர்சனம் எழுந்துள்ளது. வரவேற்கவில்லை என்றாலும், விமர்சனம் செய்வதையாவது தவிர்ப்பாரா என்றால் அதுவும் இல்லை என்றும், இதன் மூலம் அரசின் திட்டங்களை தடுக்கும் நபராக ஸ்டாலின் மாறி வருகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

அரசு செய்வதை தடுக்கிறாரா மு.க.ஸ்டாலின் ? மக்கள் ஆவேசம்

எதிர்கட்சித் தலைவர் என்பது உயர்ந்த பொறுப்பு, அதற்கு தகுதியாக நடந்துகொள்வாரா ஸ்டாலின் ? அல்லது மக்கள் திட்டங்களை எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால் அவரது அரசியல் நோக்கம்தான் என்ன என்பதே பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.