அணியின் தோல்விதான் லியோனல் மெஸ்சி விலக காரணமா?

 

அணியின் தோல்விதான் லியோனல் மெஸ்சி விலக காரணமா?

கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் எனக் கொண்டாடுபவர் லியோனல் மெஸ்சி. அவரின் ரசிகர்கள் தங்கள் குழந்தைக்கு மெஸ்சி பெயரைச் சூட்டி மகிழ்ந்து வரும் காலம். ஆனால், மெஸ்சி தற்போது எடுத்திருக்கும் ஒரு முடிவு அவரின் ரசிகர்களை மட்டுமே கால்பந்து ரசிகர்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லியோனல் மெஸ்சி பிறந்தது அர்ஜெண்டினாவில். கால்பந்துதான் இவரின் மூச்சாக இருந்தது. 16 வயதிலேயே முக்கியமான ஆட்டங்களில் ஆடத் தொடங்கிவிட்டார்.

அணியின் தோல்விதான் லியோனல் மெஸ்சி விலக காரணமா?

பார்சிலோனா அணிக்காக 700 க்கும் அதிகமான போட்டிகளில் களமிறங்கி கலக்கியுள்ளார். இவர் அந்த அணிக்காக 634 கோல்கள் அடித்துள்ளார் என்ற எண்ணிக்கையே அவரின் பெருமையும் அந்த அணியில் இவருக்கான இடத்தையும் சொல்லும்.

கால்பந்து விளையாட்டின் மாபெரும் வீரரும் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருந்த மாரடோனா, மெஸ்சியை தனது வாரிசாக அறிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டியில் பார்சினோனாவை 8:2 எனும் கணக்கில் தோற்கடித்தது முனிச் அணி. இது கால்பந்து ரசிகர்களுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியை அளித்தது.

அணியின் தோல்விதான் லியோனல் மெஸ்சி விலக காரணமா?

இதையொட்டி பார்சிலோனா அணியிலிருது விலகும் முடிவை லியோனல் மெஸ்சி எடுத்திருக்கிறார். இந்த தோல்வியும் அவரின் முடிவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. அந்த அணியுடன் மெஸ்சிக்கு 2021 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் இருந்தாலும் உடனே விலகவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அணியின் தோல்விதான் லியோனல் மெஸ்சி விலக காரணமா?

மெஸ்சிக்காக அவரின் ரசிகர்கள் வீதியில் இறங்கி ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.