“வீடு வாங்க சரியான நேரம்”

 

“வீடு வாங்க சரியான நேரம்”

குமார், நிர்வாக இயக்குநர், நவீன்’ஸ்

ஊரடங்கு தளர்வுகள் முதன்முதலில் அறிவித்தபோதே, கட்டுமான வேலைகளை தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்தது. அதன் பின்னர் தற்போது, வெளிமாநில கட்டுமான தொழிலாளர்களை விமானம் மூலம் நிறுவனங்கள் அழைத்து வருகின்றன. இப்படியான சூழலில், இந்தியா முழுவதும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இது தொடர்பாக சென்னையின் பிரபல கட்டுமான நிறுவனமான, நவீன்’ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமார், விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த உரையாடலில் இருந்து சில பகுதிகள்.

“வீடு வாங்க சரியான நேரம்”


ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கிய நிலையில், மிக அதிக வேலைவாய்ப்பை அளித்து வந்த கட்டுமானத் துறையின், தற்போதைய நிலை என்ன? எப்போது சரியாகும் ?


விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2004 ஆம் ஆண்டுகளில் ஏறத் தொடங்கிய விலை, 2008 ஆம் ஆண்டில் சற்று குறைந்ததது. பின்னர் திரும்ப 2012 -13 ஆண்டுகளில் கிடுகிடுவென விலை உயர்ந்தது.
இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் தமிழகத்தில் தொழிலை பங்கு போடத் தொடங்கியதுதான். வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, வெளிமாநில நிறுவனங்களும் தமிழகத்துக்கு வந்து கட்டுமானத் தொழிலில் இறங்கின. இதனால் தமிழகத்தில் கட்டுமான தொழில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது.

“வீடு வாங்க சரியான நேரம்”


கட்டுமான துறையில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் பாலிசிகளும் கொண்டுவரப்பட்டன. அப்படியான அந்நிய நேரடி முதலீடுகளை நீண்டகால பலன்களை அளிக்கக் கூடிய, உள்கட்டமைப்புத் துறைக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ரியல் எஸ்டேட்டில் கொண்டுவந்தது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.


ரியல் எஸ்டேட்டில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு, 2 அல்லது 3 ஆண்டுகளிலேயே லாபத்தை எடுத்துக் கொண்டு செல்லலாம் என இருந்ததால், கட்டுமானத்துறை கிடுகிடு வளர்ச்சி கண்டது.
வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்பட்ட அளவுக்கு தேவை உருவானதா என்றால் கிடையாது. இருக்கும் சிறிய அளவு இடத்திலேயே முதலீடு வந்து கொட்டப்பட்டன. அதனால் விலைவாசி உயர்ந்தது.
தவிர கட்டுமானத் துறையின் தொழில்நுட்பங்கள் மாறியுள்ளன. இதனால் செலவு அதிகரித்ததன் காரணமாகவும் விலை உயர்ந்தது. இதனால் அதிக வேலைவாய்ப்பை வழங்கி வந்த கட்டுமானத்துறை சமீப காலங்களில் பெரிய சரிவைக் கண்டது.
இப்படியாக, உற்பத்தி அதிகரிப்பு, விலை உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது எல்லாம் சேர்ந்து 2014 க்கு பிறகு கட்டுமான துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கொண்டுவரப்பட்ட 18% ஜிஎஸ்டி கட்டுமானத் துறையை மிகப்பெரிய படுகுழியில் தள்ளியது. இவையெல்லாம் சேர்ந்து கட்டுமானத்துறை மீளமுடியாத நிலைக்கு சென்றுள்ளது.

“வீடு வாங்க சரியான நேரம்”


18 சதவீத ஜிஎஸ்டி வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டியிருந்ததா? கட்டுமான நிறுவனங்கள் கட்ட வேண்டியிருந்ததா ?

யார் நுகர்வோரோ அவர்கள்தான் செலுத்த வேண்டும். ஆனால் ஒரு கட்டிடத்துக்கு யார் யார் நுகர்வோராக இருக்கிறார்கள்?. கட்டுமான நிறுவனங்களுக்கு, ஒப்பந்த நிறுவனங்கள் நுகர்வோர். ஒப்பந்த நிறுவனங்களுக்கு துணை நிறுவனங்கள் நுகர்வோர். ஆனால் இறுதியில், வீடு வாங்கும் வாடிக்கையாளர் யாரோ, அவர் ஒருவர் தலையில்தான் இந்த 18% ஜிஎஸ்டி சேரும். அதாவது வீடு வாங்கும் ஒருவர்தான் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். இதுதவிர பத்திரப்பதிவு செலவுகளும் அதிகரித்துள்ளன. மின் இணைப்பு கட்டணம், கட்டட அனுமதி கட்டணம் என அனைத்து கட்டணங்களும் அதிகரித்துக்கொண்டே சென்றுவிட்டன.


சாதாரணமாக இப்போது வீடு வாங்கும் ஒருவர் எவ்வளவு தொகை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் ?


முத்திரைத்தாள் கட்டணம் 11 சதவீதம், ஜிஎஸ்டி 12 சதவீதம் வரை செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி, தற்போது 5 சதவீதமாக குறைத்துள்ளது. ஆனால், முன்னர் இருந்த 12 சதவீதமே இருந்திருக்கலாம் என்கிற நிலைமை உள்ளது. 5 சதவீதம் என குறைத்ததால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பயனும் இல்லை.
சிமெண்ட், கம்பி, கல் என எல்லாவற்றுக்கு ஜிஎஸ்டியை தனித் தனியாக கட்டி, அதுபோக வீடு விற்க ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்பது கூடுதல் சுமையாகதான் உருவாக்கியுள்ளது . அப்படி பார்க்கிறபட்சத்தில் வீட்டின் அசல் மதிப்பில் இருந்து 25 சதவீதம் வரை கூடுதலாக செலாவாகிறது.


தற்போது , முன்போல வீடுகள் வாங்க ஆட்கள் இல்லாத நிலையில், விலை குறைந்துள்ளதாகச் சொல்கிறார்களே உண்மையா?


வீடுகளில் விலை குறைந்துள்ளது உண்மைதான். இப்போது தேவை உள்ள வாடிக்கையாளர்கள் மட்டும் வருகிறார்கள். கட்டுமான நிறுவனங்களின் நிதிச் சுமை, வங்கிக் கடன்களுக்கான வட்டிச் சுமை என எல்லாவற்றையும் சமாளிக்க, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளது. இதைச் சமாளிக்க, வீடுகளின் விலையில் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால் சற்று விலை குறைப்பு நடந்துள்ளது. வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம்தான்…

நேர்காணல்- நீரை மகேந்திரன், அசோசியேட் எடிட்டர்

உரையாடலின் முழு வடிவத்தை கீழே உள்ள இணைப்பில் காணலாம்…