ஜடேஜாவுக்குப் பதில் சஹலை இறக்கியது சரிதானா – வலுக்கும் சர்ச்சை #IndVsAus

 

ஜடேஜாவுக்குப் பதில் சஹலை இறக்கியது சரிதானா – வலுக்கும் சர்ச்சை #IndVsAus

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில் முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரில் மூன்றில் இரண்டு போட்டிகளில் தோற்று தொடரை இழந்தது இந்தியா. இந்நிலையில் டி20 போட்டித் தொடர் நேற்று தொடங்கியது.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அப்போது களம் இறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா. அதிரடியாக ரன்கள் குவிப்பதில் ஜடேஜா வல்லவர். அப்படித்தான் நேற்றும் ஆடிக்கொண்டிருந்தார்.

ஜடேஜாவுக்குப் பதில் சஹலை இறக்கியது சரிதானா – வலுக்கும் சர்ச்சை #IndVsAus

அப்போது ஆஸ்திரேலிய வீரர்ஸ்டார்க் வீசிய 20 வது ஓவரில் ஒரு பந்து ஜடேஜாவின் தலையைப் பதம் பார்த்தது. கடுமையான வலியோடு நிலைகுலைந்தார். இதனால், அவருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டது. இன்னும் வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சமும் சக வீரர்களுக்கு ஏற்பட்டது.

ஜடேஜா பீல்டிங் செய்ய முடியாது என்பதால் அவருக்கான மாற்றுவீரராக ஸ்பின் பவுலர் சஹல் அழைக்கப்பட்டார். ஆனால், இதற்கு ஆஸ்திரேலிய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், ஜடேஜா ஆல்ரவுண்டர், சஹலோ முழுக்க முழுக்க பவுலர். பேட்டிங்கில் ஆகக் கடைசியாக இறக்கி விடப்படுபவர். எனவே, ஜடேஜாவுக்குப் பதில் சஹலை இறக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போட்டியின் அம்பயர் ஆஸ்திரேலிய கருத்துகளைப் புறக்கணித்தார். சஹல் விளையாட அனுமதி அளித்தார்.

ஜடேஜாவுக்குப் பதில் சஹலை இறக்கியது சரிதானா – வலுக்கும் சர்ச்சை #IndVsAus

சஹல் ஆட்டத்திற்குள் நுழைந்ததுதான் போட்டியின் முடிவையே மாற்றியது. ஏனெனில் சஹல் வீழ்த்திய 3 விக்கெட்டுகள் சாதாரணமானவை அல்ல. ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித், மேத்வ் வடே இந்த மூவரில் ஒருவர் நிலைத்திருந்தாலும் போட்டியின் முடிவு ஆஸ்திரேலிய அணிக்குச் சாதகமாக மாறியிருக்கும். இதனால்தான் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் சஹல் இறங்க எதிர்ப்பு தெரிவித்தார். கடைசியில் அவர் பயப்பட்டதைப் போலவே ஆகி விட்டது.

சஹல் இறக்கப்பட்டது சர்ச்சையாகி இன்னும் ஆஸ்திரேலிய தரப்பில் விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் இந்திய அணியின் முடிவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அதில் ‘தலையில் அடிப்பட்ட அனுபவம் எனக்கும் இருக்கிறது. அதன்பாதிப்பு ஒருநாள் கழித்துக்கூட வரலாம். எனவே, இந்த முடிவை விமர்சிக்க வேண்டியதில்லை’ என்பதாகக் கூறியிருக்கிறார்.

ஜடேஜாவுக்குப் பதில் சஹலை இறக்கியது சரிதானா – வலுக்கும் சர்ச்சை #IndVsAus

ஆயினும் இதனால்தான் இந்தியா வென்றது என்ற தோற்றத்தை ஆஸ்திரேலிய தரப்பில் கொடுக்க முயற்சி செய்துவருகின்றனர்.