Home லைப்ஸ்டைல் உறவுகள் பொய் சொல்லாமல் குழந்தை வளர்ப்பு சாத்தியமா? #ParentingTips

பொய் சொல்லாமல் குழந்தை வளர்ப்பு சாத்தியமா? #ParentingTips

’காக்கா… என் கருப்பா இருக்கு?”

‘மேகம் ஏன் மேலேதான் இருக்குமா… கீழே இறங்காதா?

கேள்விகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன என்பார்கள். ஏன்… எதற்கு… எப்படி? என்பதே ஒருவரின் தேடலைத் தொடங்கும் முதல் புள்ளி என்று சொல்லப்படுகிறது. ஆனால், எவ்வளவு பெரிய அறிவாளியின் கேள்விகளைக்கூட எளிதாக எதிர்கொள்ளும் பெற்றோர்களால் குழந்தைகளின் கேள்விகளைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

குழந்தைகள் கேட்கும் கேள்விகள் மிக எளிதானவைதான். ஆனால், அதற்கு பதில் கடினமானது. அதை குழந்தைகள் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்வது என்பது இன்னும் கடினமானது. அதனால், பெற்றோர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு அப்போதைக்கு குழந்தையின் வாயை மூடச் செய்யும் பதில்களைச் சொல்கிறார்கள். அவற்றில் 99 சதவிகிதம் பொய்யானதாகவே இருக்கும்.

அப்படி குழந்தைகளிடம் பொய் சொல்வது தவறா என்ன?

நிச்சயம் தவறு அல்ல. ஆனால், நிச்சயம் சரியான அணுகுமுறையும் அல்ல. சரி, குழந்தைகளின் கேள்விகளை எப்படி எதிர்கொள்ளலாம்.

குழந்தைகளின் கேள்விகளுக்கு உங்களிடம் தர்க்கப்பூர்வமான பதில் இல்லை என்றால், முதல் உங்கள் மனத்திற்கு ஒத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் குழந்தையிடம் அது வெளிப்படும்.

அடுத்து, அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிக் கண்டறியுங்கள். கூகுள் ஆண்டவர் இருக்கும்போது எந்தக் கேள்விக்கும் பதில் தேடுவது மிகவும் சுலபமானதே. அறிவியல் கேள்விகள் எனில், அதற்கு உரிய நூல்களை நாடுங்கள். தயவுசெய்து வாட்ஸப் தகவல்களை உண்மை என நினைத்துவிடாதீர்கள்.

அப்படிப் பதில் தேடும்போது, இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் பதிலிலிருந்து உங்கள் குழந்தை நிச்சயம் கிளை கேள்விகள் கேட்கும். அவற்றிற்கும் தக்க பதிலைத் தேடிக் கொள்வது நல்லது.

சரி… இப்போது பதில் தேடிக்கண்டு பிடித்து விட்டீர்கள். உங்களுக்கு வாழ்த்துகள். அடுத்து, அந்தப் பதிலை உங்கள் குழந்தைக்கு எப்படிச் சொல்லலாம் என்று பார்ப்போம்.

ஐந்து முதல் பத்து வயது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு கொஞ்சம் கற்பனை கலந்து பதில் சொல்லுங்கள். நீர் ஆவியாவது பற்றிக்கேட்டால், நீங்கள் கடற்கரைக்குச் சென்ற அனுபவத்தை ஒரு கதைபோல மாற்றி, அதில் இந்த நீர் ஆவியாகும் பதிலை நுழைத்துச் சொல்லுங்கள். அப்படிச் சொல்லும்போது பதில் நன்கு நினைவில் பதியும். முடிந்தளவு அறிவியல் சொற்களைத் தவிர்த்து குழந்தைகள் புழங்கும் சொற்களைக் கொண்டு பதில் சொல்வது ந்ல்லது.

11-13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கேட்ட கேள்விக்கு, கற்பனையின் அளவைக் குறைத்து சற்றுவிரிவாக, நடைமுறை உதாரணங்களைச் சொல்லி பதில்களைச் சொல்லலாம். இந்தப் பதில் தேடும்போது புதிதாகக் கிடைத்த தகவல்கள் என சிலவற்றைச் சொல்லலாம். ஏதேனும் சிறிய அளவு சோதனைகள் செய்து பதில்களை விளக்கலாம்.

14-16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நேரடியாகப் பதில்களைச் சொல்வது நல்லது. நான் சொல்கிறேன் ; நீ கேள் என்பதாக இல்லாமல் நன்பர்கள் உரையாடும் தொனிக்கு மாற்றிக்கொண்டால் எளிதாக அவர்களின் பதில்களைச் சொல்ல முடியும்; அவர்களாலும் அப்பதில்களை உள்வாங்க முடியும். மேலும் நீங்கள் எங்கிருந்து இதற்கான பதில்களை எடுத்தீர்கள் என்ற விபரங்களைச் சொல்லலாம். புத்தகம் அல்லது இணையத்தளத்தின் விவரங்களைத் தந்து மேலதிகமாகத் தெரிந்துகொண்டு எனக்குக் கற்றுக்கொடு என்றும் சொல்லலாம்.

குழந்தையின் கேள்விக்கு அப்போதைக்கு பொய் சொல்லலாம் தவறில்லை. ஆனால், அந்தப் பொய்யை ஒருநாள் உடைத்து உண்மையைச் சொல்வதும் குழந்தை வளர்ப்பில் மிகவும் அவசியமான ஒன்று. இல்லையெனில், அந்தப் பொய்தான் சரியான பதில் என நினைத்துவிடும். அந்தப் பதிலை அக்குழந்தையின் சக நண்பர்களிடம் சொல்லும்போது கிண்டல், கேலிக்கு உள்ளாக்கப்படலாம்.

பொய் என்பது உண்மையான பதிலை நீங்கள் தேடுவதற்கு உங்கள் குழந்தையிடம் தற்காலிகாகக் கேட்கப்படும் பர்மிஷன்போல பயன்படுத்துங்கள்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

“காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகள் வழங்கினால் வெற்றி பெறுவார்களா? என திமுகவிற்கு கவலை

காங்கிரஸ்க்கு குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம் சொல்லிப் பலனில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற...

வேடச்சந்தூரில் வடமாநில ஒப்பந்ததாரரிடம் ரூ.13.9 லட்சம் பறிமுதல்!

திண்டுக்கல் வேடச்சந்தூர் அருகே சாலை ஒப்பந்ததாரர் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துவந்த 13 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

’’நான் நல்ல பாம்பு ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவேன்’’ மோடி மேடையில் பஞ்ச் அடித்த மிதுன் சக்கரவர்த்தி

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, கடந்த கடந்த 2014ம் ஆண்டில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார். ஆனால், சாரதா ஊழலில் அவர் பெயரும் அடிபட்டதால்...

தமிழகத்தில் முற்றிலுமாக குறைந்த கொரோனா உயிரிழப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 70 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...
TopTamilNews