IPL அணிகள் 8 -லிருந்து 10 ஆக அதிகரிக்கிறதா?

 

IPL அணிகள் 8 -லிருந்து 10 ஆக அதிகரிக்கிறதா?

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றி அமைத்தன. கிரிக்கெட் போட்டிகளை ஆர்வத்துடன் பார்க்காதவர்களையுமே பார்க்க வைத்தன ஐபிஎல் போட்டிகள். அதற்கு காரணம், வெறும் போட்டிகளாக மட்டுமில்லாமல், அதில் கேளிக்கை விஷயங்களையும் சேர்த்தது ஐபிஎல் நிர்வாகம்.

மேலும், மாநிலங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முறையால் உள்ளூர் ரசிகர்கள் அதிகரித்தனர். மாநில மொழிகளின் வர்ணனை செய்வதும் கூடுதல் ரசிகர்களைக் கொண்டு வந்தது.

IPL அணிகள் 8 -லிருந்து 10 ஆக அதிகரிக்கிறதா?

இப்போதுள்ள ஐபிஎல் அணியில் சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் என ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. இதில் ஒரு அணிக்கு ஒரே கேப்டன் எனும் முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமே உள்ளது. 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த சிஎஸ்கே அணிக்கு ஒரே கேப்டன் தோனி மட்டுமே. (இடையில் இரண்டு ஆண்டுகள் இந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது)

மும்பை அணியே அதிக முறை கோப்பைகளை வென்றிருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் சென்னையே உள்ளது. ஐபிஎல் போட்டிகளைப் பார்த்து பல நாடுகளில் பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப் படுகின்றன. இப்போதுகூட இலங்கையில் எல்.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

IPL அணிகள் 8 -லிருந்து 10 ஆக அதிகரிக்கிறதா?

இப்போது இருக்கும் 8 அணிகளோடு கூடுதலாக 2 அணிகளைச் சேர்க்க முயற்சிகள் நடப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்.பி.ஜி நிறுவனத்திற்கு ஐபிஎல் போட்டிகளில் ஆர்வம் என்பதால் அதுவும், அதானி குழுமமும் தங்களுக்கு என அணிகளை வாங்க விரும்புகின்றன. ஐபிஎல் நிர்வாகம் இதற்கு அனுமதி கொடுத்தால், அடுத்த தொடரில் 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் மோதும்.