கொரோனா தடுப்பு மருந்து தயாரா? ஆய்வகங்களுக்கு நேரில் செல்கிறார் பிரதமர் மோடி!

 

கொரோனா தடுப்பு மருந்து தயாரா? ஆய்வகங்களுக்கு நேரில் செல்கிறார் பிரதமர் மோடி!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வகங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரா? ஆய்வகங்களுக்கு நேரில் செல்கிறார் பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பூசி பணியில், முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு மருத்துவ ஆய்வகம், அமெரிக்காவின் ஃபைஸர், ரஷியாவின் ஸ்புட்னிக் போன்ற நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறிவதில் வெற்றி கண்டுள்ளன. அவற்றுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்பட உள்ளன. இந்தியாவிலும் பாரத் பயோடெக், சீரம் மற்றும் ஜைடஸ் நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் 95 சதவீதம் வெற்றி கண்டுள்ளன. ஆய்வக சோதனைகள் முடிவுற்று, இந்த மருந்துகள் விரைவில் மக்கள் பயன்பாட்டு வரும் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இந்த ஆய்வகங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரா? ஆய்வகங்களுக்கு நேரில் செல்கிறார் பிரதமர் மோடி!

முதலில், குஜராத் மாநிலம் அகமாதாபாத் செல்லும் பிரதமர், அங்கு ஜைடஸ் ஆலையின், செயல்பாடுகள், மருந்து ஆய்வின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிகிறார். அதன்பின்னர், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, புனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்துக்குச் செல்ல உள்ளார். இந்த ஆய்வுகளில், தடுப்பு மருந்து தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவற்றை மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள், சவால்கள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார்.