சென்னைக்கு ஆபத்தா? டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி ஆய்வு!

 

சென்னைக்கு ஆபத்தா? டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி ஆய்வு!

சுங்கத்துறையினால் பறிமுதல் செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டினால் லெபனானில் நடந்து போல சென்னைக்கும் ஆபத்து நேரும் என்ற அச்சம் எழுந்ததால் சென்னை மணலியில் புதுசரக்கு பெட்டகத்தில் 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட்டை தீயணைப்புத்துறை இயக்குநர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

லெபனான் நாட்டின் துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் வெடித்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் வெடிவிபத்து போல சென்னையிலும் நடத்துவிடுமோ என்று சுங்கத்துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

கரூர் நிறுவனத்தின் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் லெபனான் வெடிவிபத்து போல சென்னையிலும் நடத்துவிடுமோ என்று சுங்கத்துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு, இதனால் சென்னை ஆபத்து இல்லை என்று விளக்கம் தந்தனர். இந்நிலையில், தீயணைப்புத்துறை இயக்குநர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.