ஸ்டாலின் தயவுடன்தான் இதெல்லாம் நடக்கின்றனவா?பாஜகவின் ஆவேசத்திற்கு காரணம் இதுதான்

 

ஸ்டாலின் தயவுடன்தான் இதெல்லாம் நடக்கின்றனவா?பாஜகவின் ஆவேசத்திற்கு காரணம் இதுதான்

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த இரண்டு கண்டெய்னர்களில் ஆப்கன் போதைப் பொருள் இருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று இரண்டு கண்டெய்னர்களையும் கைப்பற்றி ஆய்வு செய்து அதில் இருந்தவற்றின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்டாலின் தயவுடன்தான் இதெல்லாம் நடக்கின்றனவா?பாஜகவின் ஆவேசத்திற்கு காரணம் இதுதான்

தடயவியல் ஆய்வில் அந்த கண்டெய்னர்களில் இருந்தது என்பது உறுதியானது. ஆப்கானிஸ்தானிலிருந்து டால்கம் கற்கள் என்றுசொல்லி ஈரானுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பிடிபட்ட இந்த இரண்டு கண்டெய்னர்களிலும் இருக்கும் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரியவந்திருக்கிறது.

ஹெராயின் பிடிபட்ட துறைமுகத்தை அதானி நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. மோடியின் நண்பர் அதானிக்காக மோடி அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது . அதனால்தான் அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் ஹெராயின் பிடிபட்டது இருப்பதால் காங்கிரஸ் நிர்வாகிகள் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகமான கலைஞர் செய்திகள் இணையத்தில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு தலைப்பாக அதானி துறைமுகத்தில் ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்.. மோடியின் தயவுடன் போதை பொருள் கடத்தல்? என்று வந்திருக்கிறது.

’ மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்’ என்பதை பார்த்து பாஜகவினர் கொந்தளித்து வருகிறார்கள். தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இதுகுறித்து,
திமுக நிர்வாகத்தில் தமிழக அரசு நடக்கிறது. மோசடி, முறைகேடுகள், மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு, கொலை,கொள்ளை, கற்பழிப்பு ஆகியவை முதல்வர் ஸ்டாலின் தயவுடன் நடைபெறுகிறது என்று நாம் கேட்கலாமா?இது போன்ற முட்டாள்தனமான செய்தியை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்று ஆவேசமாகிறார்.