ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு…. லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.

 

ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு….  லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.

ஐ.ஆர்.சி.டி.சி. 2020 ஜூன் காலாண்டில் ரூ.24.60 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனம் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி.). இந்நிறுவனம் கேட்டரிங், சுற்றுலா மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆகியவற்றை கையாளுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் ஐ.ஆர்.சி.டி.சி. நஷ்டத்தை சந்தித்துள்ளது.

ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு….  லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.
ஐ.ஆர்.சி.டி.சி.

கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் ஐ.ஆர்.சி.டி.சி.-ன் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டது. கடந்த ஜூன் காலாண்டில் ரயில் செயல்பாடுகள் நிறுத்ததுக்கு வந்தது, லாக்டவுனின் இறுதி கட்டத்தில் சில ரயில்களை இயக்க அரசு அனுமதி அளித்தது. இது அந்நிறுவனத்தின் வருவாயை கடுமையாக பாதித்தது. ஐ.ஆர்.சி.டி.சி. 2020 ஜூன் காலாண்டில் ரூ.24.60 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் ரூ.72.33 கோடியை லாபமாக சந்தித்து இருந்தது.

ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு….  லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.
ரயில் நீர்

2020 ஜூன் காலாண்டில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் டிக்கெட் பிரிவு வருவாய் 71.40 சதவீதம் குறைந்து ரூ.131.33 கோடியாக சரிவடைந்துள்ளது. அதேபோல் சுற்றுலா பிரவு வாயிலான வருவாய் ரூ.47.62 கோடியிலிருந்து ரூ.2.95 கோடியாகவும், கேட்டரிங் பிரிவு வாயிலான வருவாய் ரூ.271.95 கோடியிலிருந்து ரூ.89.89 கோடியாகவும், ஆன்லைன் டிக்கெட் வாயிலான வருவாய் ரூ.82.07 கோடியிலிருந்து ரூ.35.22 கோடியாகவும், ரயில் நீர் வாயிலான வருவாய் ரூ.57.85 கோடியிலிருந்து ரூ.3.25 கோடியாகவும் குறைந்துள்ளது.