13 மாவட்டங்களை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்!

13 மாவட்டங்களை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்!

12 மாவட்டங்களில் புயல் மீட்பு பணி /நிவாரண பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

13 மாவட்டங்களை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறியது. இதனால் தமிழக கடலோர பகுதியில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகே 470 கி.மீ தொலையில் மையம் கொண்டுள்ளது நிவர் புயல். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 மாவட்டங்களை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்!

இந்நிலையில் 13 மாவட்டங்களை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் -செங்கல்பட்டுக்கு அன்பு, திருவள்ளூருக்கு வனிதா ,விழுப்புரத்திற்கு சத்யபிரியா ஐபிஎஸ் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.

13 மாவட்டங்களை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்!

திருச்சி, பெரம்பலூர், அரியலூருக்கு ராஜேஸ்வரி, கடலூர் -நாகராஜன் ஐபிஎஸ் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை -லலிதா லட்சுமி ,தஞ்சை செந்தில்குமாரி ,திருவாரூர் -தமிழ்சந்திரன், நாகை ஜெயராம் மற்றும் சென்னையில் மீட்பு பணி நிவாரண பணிகளை கண்காணிக்க விசுவநாதன் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.