#IPL2021: சாம் கரண், ரெய்னாவின் அதிரடி ஆட்டம்! டெல்லிக்கு 189 ரன்கள் இலக்கு

 

#IPL2021: சாம் கரண், ரெய்னாவின் அதிரடி ஆட்டம்! டெல்லிக்கு 189 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் 14வது சீசனின் 2வது போட்டி , மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில்
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்வாட் மற்றும் பாப் டு ப்ளஸிஸ் களம் இறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரில் பாப் டு ப்ளஸிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின் கிறிஸ் ஓக்ஸின் அடுத்த ஓவரில் ருதுராஜ் கெய்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Image

தொடர்ந்து மொயின் அலி மற்றும் ரெய்னா ஜோடி சேர்ந்தனர். பவர்பிளே முடிவில் சென்னை அணி 33 ரன்களை சேர்த்தது. பிறகு மொயின் அலி ரன் ரேட்டை உயர்த்த அதிரடியாக ஆடினார். அஸ்வினியின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்த மொயின் அலி அடுத்த பந்தில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி அவுட் ஆனார்.10 ஓவர் முடிவில் சென்னை அணி 71 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய ரெய்னா 32 பந்துகளில் 3 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார். ராயுடு தன் பங்குக்கு 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை சேர்த்தது.பிறகு ரெய்னா 54 ரன்களில் ரன் அவுட் ஆக , பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோனி டக் அவுட் ஆகி வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.

இறுதிக்கட்டத்தில் சாம் கரன் மற்றும் ஜடேஜா சிக்சர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசினார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய சாம் கரன் 35ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 26 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லியில் சிறப்பாக பந்து வீசிய அவேஷ்கான், கிறிஸ் ஓக்ஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார். டெல்லிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயத்தது சென்னை.