#IPL2021: ருத்துராஜ், டூ ப்ளஸிஸ் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

 

#IPL2021: ருத்துராஜ், டூ ப்ளஸிஸ் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்சும்,புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

Image

டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். இந்த சீசனில் இதுவரை நன்றாக அடி வந்த பேர்ஸ்டோ இன்று 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த மனிஷ் பாண்டே வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். வார்னர் இன்று தனது வழக்கமான பாணியான அதிரடியை கைவிட்டு ஒரு பந்து ஒரு ரன் என்ற விதத்தில் ஆடினார். வார்னர் 50 பந்துகளில் அரை அரை சதத்தை கடக்க,மனிஷ் பாண்டே சற்று அதிரடியாக ஆடி 35 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். வார்னர் 57 ரன்களிலும்,மனிஷ் பாண்டே 61 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க , இதன் பின் வந்த வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்களும் , கேதர் ஜாதவ் 4 பந்துகளில் 12 ரன்கள் குவித்து அணியை கவுரவமான ஸ்கோரை எட்ட வைத்தனர். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

#IPL2021: ருத்துராஜ், டூ ப்ளஸிஸ் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

172 என்ற இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ஆரம்பமே அசத்தலாக அமைந்தது.
துவக்க ஆட்டக்காரர்களான ருத்துராஜ் ஜெய்க்வாட் மற்றும் பாப் டு ப்ளஸிஸ் பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க சன்ரைசர்ஸ் அணி தனது ஐந்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியவில்லை.
டு ப்ளஸிஸ் 32 பந்துகளிலும்,கெய்க்வாட் 36 பந்துகளிலும் தங்களது அரைசதங்களை கடந்தனர். சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடியை ரசித் கான் ஒருவழியாக பிரித்தார் ருத்துராஜ் ஜெய்க்வாட் 75 ரன்களில் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலியை 15 ரன்களிலும் , பாப் டு ப்ளஸிஸை 56 ரன்களிலும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் ரசித் கான். பின்வந்த ரவீந்திர ஜடேஜா , ரெய்னா ஆகியோர் வெற்றிகரமாக இலக்கை எட்டினர்.18.3 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தொடரில் சென்னை அணி தொடர்ந்து பெறும் 5-வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.