7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

 

7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 50 ஆவது ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது.

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் மந்தீப் களமிறங்கினர். ராகுல் அதிரடியாக விளையாடி 46 ரன்களை பெற்றார். மந்தீப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கெயில் 99 ரன்களும், போரான் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ் வெல் 6 ரன்களும், தீப்பக் ஹோடா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் எடுத்தது.

7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியிலிருந்து ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். உத்தப்பா 30 ரன்களும், பென்ஸ்டோக்ஸ் 50 ரன்களும் எடுத்தார். இதனையடுத்து சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 31 ரன்களும் ஜோஸ் பட்லர் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்த ராஜஸ்தான் அணி 186 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.

13 போட்டிகளில் 6 –ல் வென்று 12 புள்ளிகளோடு பஞ்சாப் பாயிண்ட் டேபிளில் 4 இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயஸ் அணியும் 13 போட்டிகளில் 6 இல் வென்று 12 புள்ளிகளோடு 5-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.