பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப்புக்கு முன்னேறியது மும்பை அணி

 

பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப்புக்கு முன்னேறியது மும்பை அணி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய 48-வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும்,பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் மற்றும் ஜோஷ் பிளிப் களமிறங்கினர். ஆரம்பமே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.ஜோஷ் பிளிப் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்,அடுத்து வந்த விராட் கோலி 9 ரன்களிலும்,ஏபி டிவில்லியர்ஸ் 15 ரன்களிலும் ஆட்டம் இழந்ததால் பெங்களூர் அணியின் ரன் ரேட் சரிந்தது. அதிரடியாக ஆடிய படிக்கல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப்புக்கு முன்னேறியது மும்பை அணி

165 என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் இஷன் கிஷன் களமிறங்கினர்.டிகாக் 18 ரன்களிலும்,இஷன் கிஷன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆட , அவருடன் ஹர்டிக் பான்டியா ஜோடி சேர்ந்தார்.ஹர்டிக் பான்டியா 17 ரன்களில் ஆட்டம் இழந்தார்.19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்தார்.இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மேலும் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.