69 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி!

 

69 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி!

ஐபிஎல் திருவிழாவில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த சீசனில் பஞ்சாப் அணி 5 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது. மற்ற அனைத்து அணிகளும் குறைந்தது 2 போட்டிகளில் வென்றிருந்தன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பிரிஸ்டோரும் களமிறங்கினர். அதிகபட்சமாக ஜானி பிரிஸ்டோ 97 ரன்கள் எடுத்தார். வார்னர் 52 ரன்களை எடுத்தார். அதன்பின் இருவரும் அடுத்தடுத்து தோல்வியை தழுவினர். வில்லியம்ஸ் கடைசி வரை களத்தில் நின்று விளையாடி 20 ரன்களை எடுத்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 201 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.

69 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி!

தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், அகர்வாலும் களமிறங்கினர். ஆனால் இருவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். நிகோலஸ் பூரன் அதிரடியாக 77 ரன் குவித்தார்.அடுத்தடுத்து களமிறங்கிய மேக்ஸ்வேல், மந்தீப் சிங் உள்ளிட்ட யாருமே எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.