வயசனவர டீம்ல எடுத்துட்டாங்க என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து முதல் விக்கெட்டை வீழ்த்திய சாவ்லா!

 

வயசனவர டீம்ல எடுத்துட்டாங்க என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து முதல் விக்கெட்டை வீழ்த்திய சாவ்லா!

ஐபிஎல் ஏலம் துவங்குவதற்கு முன்பாக சென்னை அணி வெறும் 5 வீரர்களை மட்டுமே வெளியில் விட்டது. மீதமுள்ள 20 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் சென்னை அணிக்கு ஏலத்தில் எடுக்க 14.5 கோடி மட்டுமே வரம்பு கொடுக்கப்பட்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஏலத்தில், முதலாவதாக 5.50 கோடிக்கு இங்கிலாந்து இளம் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் சென்னைக்கு வாங்கப்பட்டார். இவர் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, அதிர்ச்சி தரும் வகையில் 6.75 கோடிக்கு பியூஸ் சாவ்லா வாங்கப்பட்டார். இவர் நீண்டகாலமாக கொல்கத்தா அணிக்கு ஆடிவந்தது குறிப்பிடத்தக்கது.

வயசனவர டீம்ல எடுத்துட்டாங்க என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து முதல் விக்கெட்டை வீழ்த்திய சாவ்லா!

சாவ்லாவை 6.75 கோடிக்கு வாங்கியதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வயதானவரை இவ்வளவு விலைக்கு வாங்கியது ஏன்? என் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்றைய முதல் ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே சென்னை வீரர்கள் சிறப்பாக களம் கண்டனர். சென்னை அணியில் திட்டமிட்டபடி அதிக அளவில் ஸ்பின் பவுலர்கள் இறக்கப்பட்டனர். சென்னை சார்பாக, பியூஸ் சாவ்லா, ஜடேஜா, கேதார் ஜாதவ் என 3 ஸ்பின் பவுலர்கள் களமிறங்கினர். முக்கியமாக சாவ்லாவின் ஓவரில் மும்பை வீரர்கள் திணறினார்கள். குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிகம் திணறினார். ஒரு கட்டத்தில் சாவ்லாவை விலைக்கு வாங்கியது சரி தான் என அனைவரும் வாய்ப்பிளக்கும் அளவிற்கு முதல் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 12 ரன்களுக்கு பியூஸ் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். மும்பை அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டிகாக் 33 ரன்களுக்கு சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்தார்