ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

 

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் விருத்திமான் சாகா களமிறங்கினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்பதால் ஐதராபாத் அணி ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்டியது. பவர் பிளேயில் அதிரடி காட்டிய வார்னர் மற்றும் விருத்திமான் சாகா ஜோடி 77 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். வார்னர் 66 ரன்களிலும், சாகா 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.

220 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் தவான் களமிறங்கினர். தவான் ரன் ஏதும் எடுக்காமலும் , ஸ்டோனிஸ் 5 ரன்களிலும்,ஹெட்மெயிர் 16,ரஹானே 16 ரன்களிலும் அடுத்து அடுத்து ஆட்டம் இழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் கனவை தக்கவைத்து கொண்டது. ஆரம்பத்திலிருந்து வெற்றிகளை குவித்த டெல்லி அணி கடைசி மூன்று போட்டியில் தோல்வியடைந்தால் ப்ளே ஆஃப் முன்னேற இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டியுள்ளது. அந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பது குறிப்பிடதக்கது.